பக்கம்:வானொலியிலே.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வானெலியிலே

காவிரிப்பூம்பட்டினம் ஆகிய நகரங்களும் தலேகர்களாக இருந்திருக்கின்றன. கி. பி. இரண்டாம் நாற்ருண்டிலேயே உறையூரிலிருந்து கிழக்கே காவிரிப்பூம்பட்டினத்திற்கும், மேற்கே வஞ்சி நகருக்கும், தெற்கே மதுரை நகருக்கும் வண்டிப் போக்குவரவு, படைகள் போக்குவாவுக்குரிய பாதைகள் செவ்வையாய் அமைந்திருந்தது எனத் தெரி கிறது. தரைப் பாதைகளைப் போலவே ஆற்றுப் பாகை களேயும் போக்கு வரவுக்குப் பயன்படுத்தி வந்திருக் கிரு.ர்கள். 1916-ம் ஆண்டிற்கூட மூங்கில் கட்டுகள் ஈரோட்டிலிருந்தும் பவானியிலிருந்தும் காவிரி வழியாக திருச்சி வந்து சேர்ந்ததை நான் நன்கறிவேன்.

மதுரையில் இருந்ததுபோன்ற ஒரு தமிழ்ச் சங்கமும் பல நூல்களும் அக்காலத்தில் உறையூரிலிருந்தன. அரசாட்சி வியக்கத்தக்க முறையில் நடைபெற்றிருக்கிறது. அலெக் சாண்டருக்கும் அசோகருக்கும்கூட உறையூர் தலேவணங்கிய தில்லை. கி. பி. 7-ம் நூற்ருண்டில் சோழர் ஆட்சி உறை யூரில் வலுக்குறைந்தது. மீண்டும் 846-ல் வீர விஜயாலயச் சோழனல், சோழர் ஆட்சி வலுவாக நிறுவப்பெற்றது. 12-ம் நூற்ருண்டுவரை மிகுந்த புகழ்பெற்று விளங்கியது. மதுரையை யாண்ட முதலாவது மாரவர்ம சுந்தர பாண்டியன் கி. பி. 1835-ல் உறையூரையும் தஞ்சாவூரையும் தீயிட்டுக் கொளுத்தி, வெற்றிபெற்று, திரும்பவும் இள் ஆர்களே சோழர்களிடமே கொடுத்துவிட்டுச் சென்று விட்டான். இவ்வரலாறு திருக்காட்டுப்பள்ளி கல் வெட்டு களிலும் திருவரங்கக் கல் வெட்டுகளிலும் காணப் படுகின்றன.

பராந்தகன் ஆட்சிக் காலத்தில் உறையூரில் மண்மாரி பெய்ததாகவும், நகர் அழிந்ததாகவும் திரிசிராமலே செவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/37&oldid=646786" இலிருந்து மீள்விக்கப்பட்டது