பக்கம்:வானொலியிலே.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பொங்கல் விழா

ஆண்டுகள் தோறும் தை பிறந்தமுதல் நாளிலே நாம் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகிருேம். இப்பரந்த உலகில் இவ் விழாவைக் கொண்டாடும் வழக்கம் தமிழ் நாட்டிலும் அதைச் சார்ந்துள்ள இடங்களிலுமட்டுமே காணப்படுகிறது. இவ்வழக்கம் தோன்றிய காலத்தைத் திட்டமாகக் கூற முடியவில்லை என்ருலும் 3,000 ஆண்டு களுக்கு முன்புகூட இவ்வழக்கம் நம் தமிழ் நாட்டில் இருக் திருக்கிறது என்று நன்கு தெரிகிறது.

இப் பொங்கல் விழாவைக் கொண்டாடும் காலமானது சூரியன் தென்கிழக்கில் உதிப்பதிலிருந்து மாறி வடகிழக்கி லிருந்து உதிக்க நோக்கி, திசை திரும்பும் காலம். நல்ல மழை பெய்து நாடு சிறப்பெய்தியிருக்கும் காலம், பூவும், பிஞ்சும், காயும், கனியும் பொலிவுபெற்று விளங்கும் காலம். பனிக்காலத்திற்கும், வேனிற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம். செங்கெல்லும், தீங்கரும்பும் விளைந்து வீட்டிற்கு வந்து சேருங்காலம். உழைத்த மக்கள் ஒய்வு பெறுங்காலம். மணப்பருவமுற்ற மக்கள் மணம் பெறத் தொடங்கும் காலம் ஆகும். -

இந்த அருமையான காலத்தில்தான் பொங்கல் விழா கொண்டாடப் பெறுகிறது. இக் கன்னளிலே வாழும் இடங்கள் அனைத்தும் தூய்மைப் படுத்தப் பெறும். மண் பூசுதலையும், சுண்ணும்பு அடித்தலேயும் எல்லோர் இல்லத் திலும் காணலாம். பழைய பொருள்கள் அப்புறப்படுத்தப் பெறும். குப்பை கூளங்கள் எரிக்கப் பெறும். புதுப் பொருள்கள் கையாளப் பெறும். இதல்ை மனையும் புது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/62&oldid=646843" இலிருந்து மீள்விக்கப்பட்டது