பக்கம்:வானொலியிலே.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜப்பான் மெயின் காம்ப்

71

பட்டவர்கள். அவர்கள் தற்காலம் சைனாக்காரர்களைப் போல இருப்பதால் நமக்கு நன்கு பயன்படுவார்கள். ஆனால், அவர்களின் ஜனத்தொகை 25 லட்சத்திற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். மேற்போகுமானால் , அவர்களிற் சிலரை நமது இராணுவத்தில் சேர்த்துக் கொண்டு அவர்களைக் கொண்டே அவர்களே அழுத்த வேண்டும். இப்படி இம்சிக்கும் இராணுவத்தினர்களை சைனாக் கொரியர்களென்றோ, ஜப்பானியக் கொரியர்களென்றோ அவர்களால் கண்டு பிடிக்க முடியாது. "ஆட்டுத் தலையை விளம்பரமாக வைத்துக்கொண்டு, நாய்க் கரியை நம்மால் எப்போதும் விற்க முடியும்" என்று கூறியிருக்கிறார் ஜப்பானிய மந்திரி தனகா என்பவர். மேலும், தமது அறிக்கையில் கூறுவதைக் கேளுங்கள் :

பொருளாதார முன்னேற்றத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும், வெற்றிக்கும் போக்கு வரவு வசதிதான் தாயாக இருக்கிறது. நமது ரயில் பாதைகள் எல்லாம் அநேகமாக தென் மஞ்சூரியாவிலேயே இருக்கின்றன. வட மஞ்சூரியாவில்தான் அதிக செல்வங்கள் இருக்கின்றன. அங்கு ரயில் வசதியில்லாமையால் அச் செல் வங்களை நாம் அனுபவிக்க முடியவில்லை. தேசீய பாது காப்பிற்கும் அங்கு ரயில் வசதிகள் வேண்டும். அத்தகைய வசதியை உண்டுபண்ணினால் ஜப்பானியர்களை வட மஞ்சூரி யாவுக்கு அதிகமாகக் குடியேறும்படி செய்யலாம்.

மஞ்சூரியாவின் இருதயமும், மங்கோலியாவின் இருதயமும் போன்ற இடங்களில் தமது இரயில் பாதைகளை அமைக்கவேண்டும். அதன்மூலம் நாம் சைவிைல் ராணுவ ராஜீய பொருளாதார முன்னேற்றங்களை அழிக்கலாம். ரஷ்யர்களுடைய செல்வாக்கையும் பலத்தையும் பரவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/72&oldid=490192" இலிருந்து மீள்விக்கப்பட்டது