பக்கம்:வானொலியிலே.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

வானொலியிலே

சூளன்-டனான் இருப்புப்பாதை ஒன்றும் போட வேண்டும். இதன் நீளம் 136 மைல் இருக்கும். இதற்காக செலவிட 1 கோடி எண் போதுமானது. ஜப்பானின் எதிர் காலத்தில் ரஷ்யாவுடன் சண்டையிட்டே ஆகவேண்டும். அச்சண்டை வட மஞ்சூரியாவிலேதான் நடைபெறும். ராணுவ முக்கியத்துவத்துடன் பார்வையிட்டால், இந்த ரயில் பாதையானது ரஷ்யாவின் பின்னணியைப் பெரிதும் பயமுறுத்தவும், வட மஞ்சூரியாவிற்கு புதிய பலத்தைக் கொண்டுபோக முடியாமல் தடுக்கவும் நமக்கு உதவியாக இருக்கும்.

இந்த இரயில் பாதையினால், சைனாக்காரர்கள் இங்கு குடியேறி நமக்குச் சில்லரைத் தொந்தரவுகள் செய்யலாம். அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. மங்கோலிய அரசர்களை நமது நம்பிக்கையின் கீழ் கொண்டுவந்து கடுமையான சட்டங்களையியற்றி அவர்களை விரட்டியடிக்கலாம். இந்த ரயில் பாதைத் திட்டம் வெற்றி பெற்றால், நமது வகுப்பினரை உலகத்தையே ஜெயிக்க அனுப்பலாம். இத்திட்டப்படி மஞ்சூரியா, மங்கோலியா, சைனா இவைகளைப் பிடிக்குமுன்னே நமது சக்ரவர்த்தி மஜி அவர் களின் திட்டப்படி போர்மோசாவையும், கொரியாவையும் முன்னதாகப் பிடித்தாக வேண்டும். அவ்விரண்டும் நிறைவேறி விட்டால், தென் கடல் நாடுகள் அனைத்தும் நம் காலடியில் விழும். பிறகு ஆசியாவும், உலகமும் நம்முடையதே. . . .

சைனவையும் உலகத்தில் பிற நாடுகளையும் நாம் பயமுறுத்த அமெரிக்காவுடன் சண்டையிட்டே ஆக வேண்டும். பிலிப்பைன் தீவுகளிலுள்ள அமெரிக்கரின் ஆசியாப் படைகளின் தொல்லைகளை ஒழித்தாகவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/75&oldid=490157" இலிருந்து மீள்விக்கப்பட்டது