பக்கம்:வானொலியிலே.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜப்பான் மெயின் காம்ப் 75

ஜப்பானியக் கடலை நம் தேசிய தற்காப்புக்குக் கொண்டு வந்துவிட்டால், அமெரிக்க சைன, ரஷ்ய கடற்படைகளுக்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை" என்று தனகா கூறியிருக்கிறார், மேலும், அவர் கூறுவதைக் கேளுங்கள்.

" நாம் போதுமான இரும்பும், நிலக்கரியும் பெற்றால், உலகத்தில் பெரிய ஜன சமுதாயமாக இருப்போம். கீழ்க் கோடியும், மேற்கோடியும் படையெடுக்க முடியும். நமது மோட்டார்களுக்கும், சண்டைக் கப்பல்களுக்கும் அதிக மாக எண்ணெய் தேவை. இதற்கு அமெரிக்க யந்திரத்தை நாம் உபயோகித்தால் நமது எண்ணெய் உற்பத்தியில் 50 சத விகிதம் அதிகமாக உற்பத்தி செய்யலாம். இரும்பு, நிலக்கரி, எண்ணெய் இம் மூன்றும் நமக்கு மிகவும் முக்கியமானது.

நமக்குப் பிற நாடுகளின் பணம் தேவையாக இருக்கிறது. இதற்கு தென் மஞ்சூரியா ரயில்வே மீது பணங்களைப் போட நாம் அனுமதித்தால், மற்ற நாடுகளில் உள்ளவர்கள் நம்மீது சந்தோஷப்பட்டு பணம் போடுவார்கள். இப் பொருள் நமக்குப் பெரும் உதவியாயிருக்கும். சைனாவால் இதைத் தடை செய்ய முடியாது. இந்த நல்ல முறையைச் செய்யச் சிறிதும் தாமதம் செய்யக் கூடாது.

மஞ்சூரியா, மங்கோலியாவுக்குள் ஆஸ்பத்திரிகளும், பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்தி, டாக்டர்களாகவும், உபாத்தியாயர்களாகவும் நம்மவர்களை ஆங்கு அனுப்பி, அவர்களின் தொண்டுகள் மூலம் ஜப்பானிய மக்களின் பேரில் நல்ல எண்ணம் உண்டாகும்படிச் செய்ய வேண்டும். ஆனால், இப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில் அவர்களுக்குச் சாதாரண படிப்பு மட்டுமே சொல்லிக் கொடுக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/76&oldid=487618" இலிருந்து மீள்விக்கப்பட்டது