பக்கம்:வானொலி வழியே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியமும் நாட்டு ஒருமைப்பாடும் 13-4-66 இலக்கியம் என்பது என்ன? உலக மொழிகள் பல வற்றுள்ளும் நல்ல இலக்கியங்கள் உள்ளன. இலக்கியங்க்ள் வாழ்வினை அடிப்படையாகக் கொண்டு, நல்ல உளமுடைய கவிஞன் அல்லது புலவனிடம் உருப் பெற்று வருவன என்பதும் அக்கருத்துக்கள் கிலேத்தவையாக உள்ளமை யாலேயே அவை பற்றிய இலக்கியங்கள் என்றும் வாழ் கின்றன என்பதும் உண்மை வாழ்வையும் உயரிய நோக்கத் தையும் உணர்த்தும் வாழ்விலக்கியங்களே காலத்தை வென்று வாழும் என்பதும் தேற்றம். நம் நாட்டில் சில மொழிகள் நல்ல இலக்கிய வளம் பெற்று வாழ்கின்றன. நான் இங்கே அவை அனேத்தையும் ஆராய இயலாது. எனவே, தென்கோடியிலுள்ள தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியங்கள் பற்றியே ஈண்டு நான் காண நினைக்கிறேன். தமிழ் மொழி தொன்மை வாய்ந்த திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி என்றும் இந்தோ - ஐரோப்பிய மொழியின் உடன்பிறந்த தமக்கை என்றும் ஆய்வோர் காட்டுவர். தமிழ்மொழியின் இலக்கண 5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/7&oldid=900799" இலிருந்து மீள்விக்கப்பட்டது