பக்கம்:வானொலி வழியே.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே மாகிய தொல்காப்பியம் இன்றைக்கு மூவாயிரமாண்டு களுக்கு முற்பட்ட தென்பர். அந்த நாள் தொடங்கி இன்று வரை வாழும் தமிழ் இலக்கியங்கள் இந்திய நாட்டு ஒருமைப் பாட்டையும் ஒற்றுமையையும் எவ்வெவ்வாறு விளக்கு கின்றன என்பதைக் காண முன்னிற்கின்றேன். நாடு என்னும்போது 'பாரதமும், சமுதாயம் என்னும் போது இந்திய சமுதாயமுமே நம் முன் நிற்பன. வட இமயங் தொடங்கிக் குமரி முனே வரையிலே பல வகைகளில்வாழ்க்கை முறை - இயற்கைச் சூழல் - பண்பாட்டு எலேக் களன் - இன்ன வகைகளில் வேற்றுமைகள் இருப்பினும், அவையனைத்தும் மக்கள் உணர்வில் ஒன்றிக் கலந்து ஒருமை யுற்று விளங்குகின்றன. இவ்வொருமை உணர்விலேயே நாட்டு முன்னேற்றத்தை நம்மால் காண முடிகின்றது. வடக்கே ஆரியமும் தெற்கே தமிழும் மிகப் பழங் காலத்திலிருந்தே சிறந்து விளங்கின. இரண்டும் இலக்கிய வளம் மிக்கன. இன்று இவை பலவகைகளில் நாட்டில் பரவியுள்ளன. இருமொழிகளும் இந்தியா பண்டு தொட்டு இணைந்து வாழ்ந்த வரலாற்றைப் பல இலக்கியங்கள் கொண்டு விளக்குகின்றன. இராமாணயம், பாரதம் போன்ற வட நாட்டுப் பெருங்காப்பியங்களும் தொல் காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்ற தமிழ் நாட்டு இலக்கண இலக்கிய நூல்களும் இங்காட்டை இணைத்தே காண்கின்றன - காட்டுகின்றன. தொல்காப்பியம் இன்றைக்கு மூவாயிர மாண்டுகளுக்கு முந்தியது என்பர். அதில் வடமொழி தமிழில் வழங்கு தற்குரிய வழிகள் தரப்பெற்றுள்ளன. ஆரியருடைய பல பழக்க வழக்கங்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/8&oldid=900820" இலிருந்து மீள்விக்கப்பட்டது