பக்கம்:வானொலி வழியே.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியமும் காட்டு ஒருமைப்பாடும் மையைத் தொல்காப்பியம் காட்டுகிறது. தொல்காப்பியம் வேத காலத்துக்கு முக்தியதென்றும் அக்காலத்தும் வடக்கும் தெற்கும் இணைந்தே வாழ்ந்தன என்றும் வரலாற்ருளரும் உரையாசிரியர்களும் காட்டுவர். இன்றைய மொழி இயல் ஆய்வாளர்கள் பாரத நாடு பழங்காலத்தில் ஒரு மொழியால் இணைக்கப்பெற்றது என்பர். இதைத்தான் சிலப்பதிகாரம் 'குமரியொடு வட இமயத் தொருமொழிவைத் துலகாண்ட சேரலாதன் எனக் குறித்ததோ என நினைக்க வேண்டி யுள்ளது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவன் கடைச்சங்க காலத்துக்கும் முற்பட்டவன். காரிகிழார் என்னும் புலவர், இவன் ஆட்சி இமயம் தொடங்கி - ஏன்? இமயத்துக்கு அப்பாலும் கின்று - குமரி வரை இருந்தது என்கிருர்". இம்மன்னன் பல யாகங்கள் செய்துள்ளமையின் ஆரியர் தமிழரொடு கலந்து வாழ்ந்த பிறகே இவன் ஆட்சி நடைபெற்றிருக்க வேண்டும். இவன் காலத்தைக் கி. மு. 1000க்கும் 500க்கும் இடைப்பட்டதாகக் கூறுவர். இவனைப் போன்றே இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் அக்காலத்தில் வாழ்ந்துள்ளான். பதிற்றுப்பத்து வழியே சேர மன்னன் ஒருவன் பாலேக் கெளதமனரையும் அவர் பத்தினி யாரையும் யாகம் செய்து சுவர்க்கம் அனுப்பின்ை எனக் காண்கின்ருேம்." புறம் இரண்டாம் பாட்டில் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பர் பெருஞ்சோற்றுதியன்சேரலாதனப் பாராட்டுகிரு.ர். 1. கற்பியல் 4, 5, மரபியல் 66 2. நச்சினர்க்கினியர் உரை 3. சிலம்பு - 29 காதை 4. புறம் 6. 5. பதிற் - 3ம் பத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/9&oldid=900842" இலிருந்து மீள்விக்கப்பட்டது