பக்கம்:வானொலி வழியே.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே இறுதியில் இவனே வாழ்த்தும் அவர், பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று அம்மன்னன் வாழ வேண்டும் என்கிருர். ஆகவே அப்புலவர் உள்ளத்தில் வடகோடியிலுள்ள பனிமலையும் தென்கோடியிலுள்ள அகத்தியர் வாழும் பொதிய மலேயும் ஒன்ருகவே காட்சி தருகின்றன. இலக்கண இலக்கியத் தலைவர் அகத்தியர் வரலாறே நாட்டு இணைப்பைக் காட்டுவது தானே! இப்புலவர் இப்பாடல் வழியே மற்ருெரு இணைப்பை யும் காட்டுகின்ருர். இச்சேரலாதன் பாரதப் போரில் சோறு: அளித்த சேரன் என்கிருர், பாரதப் போரில் இம்மன்னன், இருபடையினரிடமும் வேறுபாடு காட்டாது வாடு வோருக்குச் சோறு அளித்தான் எனக் காண்கிருேம். இக்காலத்திய 'செஞ்சிலுவைச் சங்கத்தைப் போன்ற நிலையில் இவன் அன்று பணியாற்றியுள்ளான். அருச்சுனன் பாண்டியன் மகளே மணந்தான் என்ற இலக்கிய மரபும் உண்டு. எனவே, பாரத காலத்திலே தெற்கும் வடக்கும் இணைந்தமை தெரிகின்ற தன்ருே? தமிழ் இலக்கியங்களில் நந்தர், மெளரியர் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. கி. மு. ஏழாம் நூற்ருண்டிற்குப் பிறகு வடநாட்டு அரச பரம்பரைக்குள் போட்டி உண்டாயிற்று. சில பரம்பரைகள் ஓங்கின; சில தாழ்ந்தன. இவற்றுள் நந்தர் பரம்பரையினர், பாடலியை (தற்கால பாட்)ைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அவர்கள் தமிழ் மன்னருடன் நட்பினராக இருந்தன்ர். அவர்களே வீழ்த்த மெளரியர் பரம்பரை, அலெக்சாந்தரைத் தோற். கடித்த சந்திரகுப்தர் தலைமையில் முயன்றது; வெற்றியும் கண்டது. அம்மெளரியருக்கு அஞ்சிய நந்தர் தம் 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/10&oldid=900672" இலிருந்து மீள்விக்கப்பட்டது