பக்கம்:வானொலி வழியே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியமும் நாட்டு ஒருமைப்பாடும் செல்வத்தைக் கங்கைக் கரையில் மறைத்து வைத்தனர். இவ்வுண்மையை அக்காலத்தில் வாழ்ந்த மாமூலர் என்ற தமிழ்ப்புலவர் எடுத்துக் காட்டியிருக்கிருர். தென்னடு வரை மெளரியர் வந்ததையும் அவர் குறிப்பிடுகிருர்’. நண்பராகிய தமிழ் மன்னரிடம் அடைக்கலம் புகுந்த கந்தரைத் துரத்திக் கொண்டு மெளரியர் தமிழகம் வரையில் வந்திருக்கலாம். தம் நண்பர் கோசருக்காகப் பாண்டிய காட்டு மோகூர் வரை மெளரியர் வந்தார் என்கிருர் மாமூலர். வேறுபல புலவரும் இம்மெளரியர் பற்றிப் பாடி யுள்ளனர். இவை அனைத்தும் வரலாற்று ஆசிரியர் ஸ்மித் கூறிய இந்திய வரலாற்ருெடு பொருந்தியுள்ளன. எனவே, தமிழகத்தில் கி. மு. நான்காம் ஐந்தாம் நூற்ருண்டு களில் தோன்றிய இலக்கியங்கள் வழி வடக்கும் தெற்கும் அரசியல் தொடர்பு கொண்டு வாழ்ந்தன எனக் காண் கிருேம். சமண சமய இலக்கியங்கள் சந்திரகுப்தன் தமிழகம் வரையில் வந்து, இறுதி நாளில் மைசூர் நாட்டுச் சிரவணபெலகோலாவில் இறைநிலையுற்ருன் என்கின்றன. அடுத்து, அசோகரும் அவர்தம் மக்களும் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் சமயம் பரப்ப வழி வகுத்ததுமை வரலாறு கண்டதே. அக்கால இலக்கியங்கள் மறைந்தன போலும்! தமிழ் நாட்டுப் பெருமன்னர்கள் இமயம் வரை சென்ருர்கள் என இலக்கியங்கள் காட்டுகின்றன. ஒரு சேர மன்னன் "இமய வரம்பன்' எனப் பாராட்டப் பெறுகிருன். குமட்டுர் கண்ணனர் அவன் புகழைப் பாடியுள்ளார். ' 1. அகம் 265 வரி 1-7. . அகம் 251 வரி 3-12. அகம் 69, 10.13, புறம் 175. 2 . பதிற்றுப்பற்று 11, 23-25. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/11&oldid=900674" இலிருந்து மீள்விக்கப்பட்டது