பக்கம்:வானொலி வழியே.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே அக்காலத்திலேயே பல வடநாட்டுப் பழக்கவழக்கங்கள் தமிழ் மக்களால் சிறந்தனவாக ஏற்றுக்கொள்ளப்பெற்றன. அப்படியே தென்னட்டுப் பழக்கவழக்கங்களும் வடநாட்டில் பரவியிருக்கவேண்டும். தமிழர் யாகங்களைச் செய்தும் பிற சமய நெறி பற்றியும் வாழ்ந்த குறிப்பும் உள்ளன. கி. மு. முதல் அல்லது கி. பி. முதல் நூற்ருண்டில் ஆண்ட சோழன் கரிகாற்பெருவளத்தான் இமயம் வரை சென்ற பெரு. மன்னன். அவன் நண்பன் அவந்தி வேந்தன் அவனே ஏற்றுச் சிறப்புச் செய்தான். மாறுபட்ட மகத மன்னனும், பின் உற்ற நண்பனகிப் பட்டி மண்டபம் தந்தான். சேரன் செங்குட்டுவன் இமயம் வரையில் சென்றதைச் சிலப்பதிகார வஞ்சிக்காண்டம் நன்கு விளக்குகிறது. அவன் நண்பனுகிய கங்கைக்கரையில் வாழ்ந்த மன்னன், சதகர்ணி என்பான், செங்குட்டுவன் கங்கையைக் கடப்பதற்கும் வேறுபல வகை யிலும் உதவியுள்ளான். கனக விசயர் என்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மன்னர் முதலில் மாறுபட்டவராகக் காணினும், கண்ணகி விழாவில் நட்பினராகவே காட்சித் தருகின்றனர். பாண்டியன் நெடுஞ்செழியன் இமயம் வரை சென்று 'ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனப் போற்றப்பட்டான். இவர்கள் வெறும் மண்ணுசையால் வடக்கு நோக்கிச் சென்றவ ரல்லர். இமயமும் கங்கையும் அவர்களுக்கு உயர்ந்த தெய்வ நிலைக்களன்களாக இருந்தன. இமயக் கல்லும் கங்கை ரோட்டலுமே தமிழகத் தெய்வ நலத்தை வாழ வைத்தன. அக்காலத்திலெல்லாம் இரு பெரும் பகுதிகளில் ஆண்ட மன்னர் பலரும் இணைந்தே. 1. பதிற். 24. 5-8. 2. பதிற். 70. 18-19,74. 1-2. 3. சிலம்பு 5. 99-105. 10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/12&oldid=900676" இலிருந்து மீள்விக்கப்பட்டது