பக்கம்:வானொலி வழியே.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியமும் நாட்டு ஒருமைப்பாடும் வாழ்ந்தனர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. சிலம்பிற்குப் பின்வந்த மணிமேகலை, சீவக சிந்தாமணி முதலிய பெருங்காப்பியங்களும் வடக்கும் தெற்கும் இணைந்த வரலாற்றை, காய சண்டிகை போன் ருேர் வரலாற்று வழியும் சீவகன் பிறநாட்டு மக்களுடன் பழகி வாழ்ந்து மணங்கொண்ட வழியும் காட்டுகின்றன. இவ்வரலாறுகள் வழியும் பல வகையில்-சமுதாய நிலையில்வடக்கும் தெற்கும் இணைந்து வாழ்ந்தன எனக் காண்கின் ருேம். இவ்வாறே வடநாட்டு இராமாயண பாரதக் கதை கள் தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எடுத்தாளப் பெற்றுள்ளன. சில தமிழக இலக்கியங்கள் வழியே இப்பெருங்கதைகளின் மூலத்தில் காணுத நல்ல குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. இராமன் சேது அணைகட்டுமுன் ஆலமரத்தடியில் இருந்து ஆராய்ந்தான் என அகநானூறு குறிக்கிறது இராவணனல் கொண்டு செல்லப்பட்ட சீதை இட்ட அணி கலன்களே மாறி அணிந்த குரங்குகளைப் புறம் காட்டுகிறது." கைலேமலேயைத் துரக்கிய இராவணனைக் கலித்தொகை காட்டுகிறது. பாரதப் போரில் சேரன் சோறளித்ததை முன்பு கண்டோம். இவ்வாறு பல இலக்கியங்கள் வடக்கும் தெற்கும் இணைந்ததைக் காட்டுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் தனித்த இலக்கியங் களே ஆய்வதை விடுத்து, பொதுவாக இலக்கியங்கள் காட்டு ஒருமைப்பாட்டை எவ்வாறு காட்டுகின்றன என்பதையும் உணர்ந்து நோக்குவது ஏற்றமுடையதாகும். தமிழில் 1. அகம் 70, 15,17. 2. புறம் 378, 18-21. 3. கலி 38, 1-5. 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/13&oldid=900678" இலிருந்து மீள்விக்கப்பட்டது