பக்கம்:வானொலி வழியே.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே மிகப் பழங்காலத்திய பாடல் ஒன்று, 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உணர்வை மக்களுக்கு ஊட்டு கின்றது. இதன்வழியே கற்றவர், மக்களினத் திடையில் யாதொரு வேறுபாடும் இன்றி ஒத்து நோக்கி வாழ்பவர் என்பதை நன்கு உணரலாம். எனவே, இவ்விலக்கியங்கள் காட்டு ஒருமைப்பாட்டிற்கு மட்டுமன்றி உலக ஒற்றுமைக்கே காரணமாக அமைவதைக் காணலாம். பிற்காலத்தில் வந்த பெரும்புலவர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று சமயத்தையும் சமுதாயத்தையும் இணைத்தே காட்டினர். இந்த நூற்ருண்டில் வாழ்ந்த விடுதலைக் கவிஞர் பாரதியார் உலகம் உய்யத் தமிழ்ப்பெரு இலக்கியம் பாடிய திருவள்ளு வைைர எண்ணியபோது, அவர் வாய், " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ' எனப்பாடிற்று, இந்த நூற்ருண்டில் வாழ்ந்த பல புலவர்கள் தமிழில் மட்டுமன்றிப் பிற மொழிகளிலும் நாட்டு ஒற்றுமை, உலக ஒற்றுமை ஆகியவை பற்றிப் பல பாடியுள்ளார்கள். திருக்குறளைப் போன்றே வடமொழிப் பெருங்காவியங்களைச் செய்த வால்மீகி, வியாசர், காளிதாசர் போன்ற அறிஞர்கள் ஒருமை உணர்வைத் தூண்டும் வகையினலேயே தம் காவி யங்களை யாத்துள்ளனர். தமிழ் இலக்கியங்களில் காணும் சில குறிப்புக்கள் சமயத்துறையில் இந்நாட்டின் பகுதிகள் இணைந்துள்ளமை யையும் காட்டுகின்றன. உருவ வழி பாட்டு நெறியிலேயும் 'மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முறையிலேயேயும் இமயம் தொட்டுக் குமரிவரை இணைப்பையே காணமுடிகின்றது. சங்க இலக்கியங்களும் காப்பிய இலக்கியங்களும் பிற்காலச் சமய இலக்கியங்களும் இந்திய நாட்டை இணைத்தே காட்டு 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/14&oldid=900680" இலிருந்து மீள்விக்கப்பட்டது