பக்கம்:வானொலி வழியே.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியமும் நாட்டு ஒருமைம்பாடும் கின்றன. இருவேறு மொழிகளும் இணைந்தே காட்டப் பெறுகின்றன. ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த அப்பர், ஆண்டவனே, "ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என் றும் 'ஆரியமும் தீந்தமிழும் ஆயினன் காண்’ என்றும் பாடி யுள்ளார். கடவுளர் தம் உரு நிற அமைப்புக்களில் வேற் அறுமை இடையில் ஒருமைப்பாட்டினே அக்காலத்திலும் அதற்கு முன்னும் வாழ்ந்த இலக்கியப் புலவர்கள் காட்டி யுள்ளார்கள். கலித்தொகை சிலப்பதிகாரம் போன்ற காவியங்கள் இவ்வுண்மையை நன்கு நிலைநாட்டுகின்றன. இவற்றின் வழி உயரிய உண்மையை நாம் உணர்ந்து கொள் கிருேம், மொழி, சாதி, சமய, கிற வேறுபாடுகள் தோன்ரு வகையில் எல்லா வேறுபாடுகளையும் மறந்து, ஒரு இனத்த வரை மற்ருெரு இனத்தவர் தாழ்த்தா வகையில் ஒன்றி வாழ் தலே வாழ்வு; உண்மைப் பண்பாடும் அந்த இணைப்பில் உரு வாவதே யாகும் என்பதே அவ்வுண்மை. மிகப் பழங்காலத்திலேயே தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழி பயின்று தமிழரோடு கலந்து தமிழ்ப்பாட்டிசைத்த ஆரிய மன்னரும் உள்ளனர். இவருள் சிறந்தவர் யாழ்ப்பிர மதத்தர். இம்மன்னர் தமிழ்நாட்டு இசைக்கருவிகளுள் சிறந்த யாழில் வல்லவராக இருந்ததோடு இவர் பாடிய தாகவே சங்கப் பாடலும் உள்ளது. இவருக்கு தமிழ்வளன் காட்டுவதற்கெனவே சிறந்த புலவர் கபிலர் குறிஞ்சிப் பாட்டைப் பாடினர். இதே வகையில் பல தென்னட்டு மக்கள் வடகாடு சென்று அங்காட்டு மொழிபயின்று பல கல்ல இலக்கியங்களே இருமொழிகளிலும் மொழிபெயர்த்த 1. கவி-134, 2. சிலம்பு 5, 171-72 3. குறுந்தொகை 184. 13.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/15&oldid=900682" இலிருந்து மீள்விக்கப்பட்டது