பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையாழ்வார் 81 என்று அழகாகக் காட்டுவர். உபதேசத்தால் சேதநன் மீளாமைக்குக் காரணம் யாதானும் ஒர் ஆக்கையில் புக்கு, அங்கு ஆப்புண்டும், ஆப்பு அவிழ்ந்தும், மூது ஆவியில் தடு மாறும் உயிர் (திருவிருத். 95) என்பதுவேயாகும். அதாவது இறைவனிடத்தில் ருசி இல்லாதவனாய், இவ்வுலக இன்பத் தில் ருசி உள்ளவனாய்ப் போதலினால் வந்த கெட்ட வாசனை முதலியவைகள். இறைவன் மீளாமைக்குக் காரணம் மக்கட்குத் தகுதியாகத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தாலே நின்ற நிலை இளகாமல் நிற்கைக்கு இட மான நிரங்குச் சுவாதந்திரியம்; அதாவது தடை இல்லாத சுவாதந்திரியம் என்பதனாலாகும். இனி, மக்களை அருளாலே திருத்துதல் யாங்கனம்? "ஐயோ, இவனுடைய தீய அறிவு நீங்கி ஈசுவரனிடத்தில் ருசி உண்டாவதற்கு அடியான நல்லறிவு உண்டாக வேண்டும்’ என்று அவர்கள் திறத்தில் தான் பண்ணுகின்ற பங்கயத்தாள் திருவருள் (திருவாய் 9.2:1) என்கிற மேலான அருளாலே அவர்களுடைய தியஅறிவு குலைந்து பகவானிடத்தில் ருசியுடையனாம்படி செய்தலாகும். ஈசுவரனை அழகாலே திருத்துதல் யாங்ங்னம்: ஓம் காண். போ உனக்குப் பணி அன்றோ இது? என்று உபதேசத்தை உதறி எறிந்துவிட்டு, கண்களைப் புரட்டுதல் கச்சையை நெகிழ்க்குதல் முதலிய சாகசச்செய்கைகளால் அவனைப் பிச்சேற்றித் தான் சொன்னபடி செய்தலல்லது வேறுவழி யில்லாமல் செய்து அங்கீகாரத்தைச் 'சய்வதிலே நோக்குடையவனாகச் செய்தலாகும். பெரிய மிடுக்கனும் முரடனுமான அது மனையே அசோகவனத்தில் தம் உபதேசத்தால் பொறுக்குமாறு செய்த பிராட்டியார் தம் அழகில் சிக்குண்டு தம்மிடம் அளவு கடந்த அன்புடையவனும் தம் சொல்லின்படி நடப்பவனுமான (Hen-pecked) பெருமானைப் பொறுக்குமாறு செய்வர் என்பதைக் சொல்லவும் வேண்டுமோ? ఇrr. ఖ్మెణాళీ