பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் 器? ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றுமிலார்க்(கு) ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ (235) என்று விவரிப்பர். இப்படிச் சில இடங்களை இருவர்பனுவல் களிலும் கண்டு தெளியலாம். . இறையதுபவம் : இருபெரியார்களும் இறைவனை அமுது, ஆராஅமுது என்றே கொள்பவர்கள். நம்மாழ்வார் பல பாசுரங்களில் இறைவனை அமுதாகவே காண்பர். உள்கலந்தார்க்கு ஒர் அமுதே' (1. 6:5) என்று கூறுவது காண்க. மேலும் துாயஅமுது (1, 7:3), என்.அமுதம்’ (1, 9:11, என்கடல்படா அமுதே' (2. 3:5), ஆராஅமுத மாய் (2. 5:5), நல்ல அமுதம் (2. 5:9), அமுது ஆயவான் ஏறு’ (2. 6:1), நலம் கடல் அமுதம் என்கோ?" (3.4:5), கரும்பின் இன்சாறினை கட்டியை, தேனை, அமுதை (3. 5:6), எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை' (3. 6:7), ஆவியே! ஆர்.அமுதே!” (3.8:7): கட்டியை, தேனை அமுதை, நன்பாலை' (3 10:3), அமுதும் ஆகித் தித்திப்ப" (4.3:10), ஆராஅமுதே' (5. 8:1), யாழின் இசையே, அமுதே' (5. 8:6), *இன்.அமுதம் தன்னை (5.9:5), அடியேன் மேவி அமர் கின்ற அமுதே' (6.10:7), அண்ணலே! அமுதே' (7.1:1), கன்னலே! அமுதே!. (7.1:2). இன்.அமுது எனத்தோன்றி, (7.1:8), ஆவியே" அமுததே!. (8. 1:1), பேனுவார் அமுதே!. (8.1:2), அமரர்தம் அமுதே!. (8. 1:4), 'க்டலினுள் அமுதே' (8.1:7) என்பவை காண்க. இறைவனை அமுதம்' என்று பொதுவாகக் குறிப்பிட்ட ஆழ்வார் திருக்குடந்தை எம்பெருமானுக்கு ஆராஅமுதன்’ (5.8:1) என்ற பெயர்சூட்டி மகிழ்கின்றார், மணிவாசகப் பெருமானும் பல இடங்களில் இறைவனை அமுதமாகவே சுட்டி உரைப்பர். ஆராஅமுதே அளவிலாப் வா. வா.-?