பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

射器 வாய்மொழியும் வாசகமும் மாலே பிரமனே மற்றொழிந்த தேவர்களே துலே நுழைவரியான் துண்ணியனாய் வந்து (கிே)ே என்பதாலும் சிவனது பரத்துவமும் ஏனைய தேவர்களின் தாழ்நிலையும் அறிய முடிகின்றது. இன்னும், தடமதில்கள் அவைமூன்றும் தழல்எரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் (269) என்ற பாடலும், கலமுடைய காரணன்தன் கயனம் இடங்து அரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் (272) என்ற பாடலும் முழுமுதற்கடவுள் சிவன் என்பதையும் திருமால் சிறுதேவதை என்பதையும் அறிவிக்கின்றன. இங்ஙனம் எத்தனையோ பாடல்கள். உருவம், காமம் இல்லாதவன் இந்த இரண்டு ஞானச் செல்வர்களும் இறைவனுக்கு உருவம், பெயர் முதலியன இல்லை என்று கூறியவர்கள். இதனை இருவரின் பாடல் களாலும் அறியலாம். இறைவனின் உருவம் முதலியன பற்றிப் பராங்குசர், . . .” பேரும் ஓர் ஆயிரம் பிற்புல் உடையனம் பெருமான் பேரும் ஓர் உருவமும் உளதுஇல்லை இலது இல்லை பிணக்கே (1.3:4) என்று கூறிவார். இக்கருத்தையே மணிவாசகப்பெருமான்,