பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{#4 வாய்மொழியும் வாசகமும்

  • ۔

மக்களிடையே வழங்கும் பழமொழிகளையும் கலையுணர்ச்சி யுடன் கையாண்டதால் இப்பெரியார்களின் கருத்துகள் மக்கள் உள்ளத்தில் வேர்விட்டு நன்கு வளர்வதற்குக் காரண மாயின. ஒரே ஒர் அரிய பழமொழி நம்மாழ்வாரின் திருவிருத்தத்திலும் மணிவாசகப் பெருமானின் திருவாசகத் திலும் கையாளப் பெற்றிருப்பது நம்மை வியக்கவைக் கின்றது. நம்மாழ்வார் நாயகி நிலையிலிருந்து பேசுகின்றார். மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே மெய்ப்படி யானுன் திருவடி சூடுங் தகைமையினார் எப்படி யூராமிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்னும் அப்படி யானும் சொன்னேன் அடியேன்மற் றுயாதென்பனே. (94) (மை படி-நீல நிறம் செறிந்த மெய்படிஉண்மையான நெறி; தகைமை-தன்மை: ஊர்ஆ-(கண் தெரிந்த) ஊர்ப் பசுக்கள்; மிலைக்க - கனைக்க; குருடுஆ - குருட்டுப் பசுக்கள்; மிலைக்கும் - கனைக்கும்; சொன் னேன் - துதித்தேன்; மற்று யாது - வேறு என்ன என்பன் - சொல்லுவேன்.,1 'கண்டார் கண்குளிரும்படியான உனது திருமேனியையும் சிவந்த தாமரை மலர்போன்று இருக்கும் திருக்கண்களையும் உடையவனான உன்னுடைய திருவடித் தாமரை மலர்களை மெய்யாகக் கண்டு தலைமேற்கொண்டு அநுபவிக்கும் தன்மையுடையவர்கள் வேதவேதாந்த ஞானத்திற் சிறந்த மகான்களேயாவர்: அறிவிலியான நானும் அவர்களைப் போல் ஏதோ சொல்லுகின்றேன். இஃது என்போல வெனில் : நன்றாய்க் கண் தெரிந்த பசுக்கள் ஊர்புகுந்து சேர்ந்ததும், அந்த மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகக் கனைக்