பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் 贾伊莎 கின்றன. கண் பார்வையற்ற குருட்டுப் பசுவும் அதுகேட்டு அதன் காரணம் இன்னெ தன்றறியாமலே ஒக்கக் கனைக்கும் என்று உலகம் சொல்லும், வேதவிற்பன்னர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்ட ஞானத்தாலே சொல்லுகின்றேனே யன்றி, என் ஞானக்கண்ணால் கண்டு என் ஆற்றலால் சொல்லவில்லை” என்கின்றாள் பராங்குச நாயகி (பராங். குசர் - நம்மாழ்வார்). . - மணிவாசகப் பெருமானும் இதே பழமொழியைத் திருவாசகப் பாடல் ஒன்றில் (தானானதன்மையில்( கையாண்டு பாடுகின்றார். தாரா உடையா யடியேற்கு உன்தாள் இணையன்பு பேரா உலகம் புக்காரடியார் புறமே போந்தேன்யான் ஊரா மிலைக்கக் குருட்டாமிலைத் தாங்கு உன்தாள் இணையன்புக்கு ஆராஅடியேன் அயலே மயல்கொண் டடியேனே (91) (தார் - மாலை; பேரா - மீளா ஊர் ஆ. . ஊர்ப்பசு, மிலைக்க கனைக்க; குருட்டு ஆ - குருட்டுப் பசு, மயல் கொண்டு - அவாக் கொண்டு; 'சிவனே, நின் அடிமையாகிய எளியேனுக்கு உன் திருவடித் தாளினையின் மெய்யன்பினைத் தந்தருள்க: நின் மெய் யடியார் என்றும் மீளா உலகம் புக்கனர். அடியேன் புறமே போந்தேன். ஊர்ப்பசுக்கள் கனைத்த காலத்து அதனோ டுள்ள குருட்டுப் பசுவும் கனைத்ததையொப்ப நின் திருவடிக் கண்வைக்குப் துய்ப்பாகிய அநுபவ மெய்யன் பில்லாத யானும் மெய்யன்பு வேண்டி அவாக் கொண்டு அழுகின் றேன்' என்கின்றார். இந்த இரண்டு ஞானச் செல்வர் களின் நைச்சியாது சந்தானத்தை (தாழ்வை வாய்விட்டுக்