பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置争莎 வாய்மொழியும் வாசகமும் கூறுதலை) அவர்தம் திருப்பாடல்களில் காணலாம். பழமொழியில் அவர்தம் உள்ளக்கிடக்கைத் தெளிவுறுதலை பும் கண்டு மகிழலாம், "தாவினுக்கு அருங்கலம்" என்றும் நல்லக விளக்கு” என்றும் பாராட்டப் பெறும் திருவைந்தெழுத்தை முதலாக வைத்து நமச்சிவாய வாழ்க’ என்று தொடங்கும் சிவபுரா னம் முதலாக அமைந்திருப்பது திருவாசகத் தொகுப்பு: நாலாயிரத்தை அடைவுபடுத்தித் தொகுத்த நாதமுனிகள் *ஆன்ம உபதேசமாக அமைந்த உயர்வு அற உயர்நலம் உடையவன்' என்று தொடங்கும் பதிகத்தை முதலாக அமைத்துத் தொகுத்ததே திருவாய்மொழித் தொகுப்பு. இப்படிப் பல ஒற்றுமைகளை இந்தத் தெய்வப்பனுவல்கள் இரண்டும் கொண்டு இலங்குவதைக் கண்டு மகிழலாம்.