பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நம்மாழ்வாரின் இறையநுபவம்" ம்ேமாழ்வார் கருவூரிலிருந்த பொழுதே (கருவில்) ஞானத்திருவுடையவர். கருவரங்கத்துள் கி - ந் து கைதொழுதேன்’ (முதல் திருவந், 6) என்று பொய்கையாழ் வார் கூறுவது போலவும், கருக்கோட்டியுள்ளிருந்து கைதொழு தேன்’ (இரண்டாம் திருவந்,87) என்று பூ தத் தாழ்வார் கூறுவது போலவும் இவர் கருவிலே திருவுடைய வர். உறையூருக்கு (பூவுலகம்) வந்த பிறகும் இவர் ஒதாது உணர்நத ஞானச் சிறப்புடையவர் என்று வர லாறு கூறுகின்றது. அறிவு தோன்றுவதற்குரியதல்லாத மிக்க இளம் பருவத்திலேயே இவ்வ்ாழ்வார் இறைவன் பால் பேரன்பு கொண்டவர் என்பதை, அறியாக் காலத்துள்ளே அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால் -திருவாய் 2.5:3 என்ற இந்த ஆழ்வாரின் கூற்றாலேயே அறியலாம். அறியாக் காலந்தொட்டு இறைவனிடம் உண்டாகிய ஆழ்வாரின் அன்பு நாளுக்குநாள் பெருகி வளர்வதா யிற்று. இறைவனை நினைத்தல், அவனை அன்போடு வணங்குதல் என்பன போன்ற செயல்கள் ஒருவித கடமை யோடு நடைபெறுவன என்றில்லாமல் அவை அவரது இயல்பாகவே அமைந்து விட்டன. அவனை நினைக்காமல் இருக்க முடியாத நிலையும் ஏற்பட்டுவிட்டது. மக்கள்

  • அண்ணாமலைப்பல்கலைக் கழக இணை வேந்தர் டாக்டர் எம். ஏ. எம். இராமசாமி அவர்களின் மணி விழா மலரில் (1991) வெனிவந்தது.