பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贾独& வாய்மொழியும் வாசகமும் உணவின்றி உயிர் வாழ இயலாதவர்களாக இருப்பது போல ஆழ்வார் எம்பெருமானை நினையாதிருக்க. அன்பை விட்டிருக்க இயலாதவராகிவிட்டார். எம்பெரு மானைப் பற்றிய நினைவு அவரது உள்ளத்தில் இன்ப ஊற்றாகி விட்டது. அதனால் நம் முன்னோர் ஆழ்வார். பிரபத்தியை மேற்கொண்டவரே; ஆனால் பக்தி அவருக்கு தேக யாத்ராசேஷம் (பக்தியின்றி உயிர் வாழ இயலாத வர்) என்று அறுதியிட்டு உரைத்தனர். இருவகை இன்பம் : மக்கள் இரண்டு வகைகளில் இன்பம் எய்துகின்றனர். ஒன்று, ஐம்பொறிகளால் அறி தற்குரிய பொருள்களை நுகரும்பொழுது உள்ளத்தில் உண்டாகும் இன்பம். இரண்டு, இங்ங்னம் ஐம்பொறிகளின் தொடர்பில்லாமலேயே உள்ளத்தில் இன்பம் உண்டாத லும் உண்டு. இதுவே உயர்ந்த இன்பம்; மானச இன்பம். துன்ப நிகழ்ச்சிகளை அநுபவித்துக் கொண்டே மனத்தில் இன்பம் உண்டாதலும் உண்டு, நாடு விடுதலை பெறும் பொருட்டு நாட்டுப் பற்றாளர்கள் சிறையில் அநுபவித்த துன்பங்களை இன்பமாகக் கொண்டார்களன்றோ? அஞ் சிறைய மடநாராய்” (1.4:1 என்று தொடங்கும் திரு. வாய்மொழியில் வஞ்சிறையில் அவன் வைக்கில் வைப் புண்டால் என் செயுமோ?’ என்ற அடியின் பொருளை விளக்குமிடத்தில் 'பரார்த்தமாகச் சிறை இருக்கும் இருப்பு கிடைக்க வேண்டுமே!’ என்றார் உடையவர். பரார்த்தமாகச் சிறையிருக்கும் இருப்பு உடலளவில் துன்பச் மாயினும் மன அநுபவத்தில் இன்பமாகும் - பேரின்பமா கும் என்பது அந்த ஆசாரியப் பெருமகனின் கருத்தாகும். வள்ளுவப் பெருந்தகையின் கருத்தும் ஈண்டு நினைத்தல் தகும், இடுக்கண் வருங்கால் நகுக: (குறள் 621) என்ற குறளில் "துன்பம் வரும்போது சோர்ந்து அழியாமல் உள் ளத்தில் மகிழ வேண்டும்; வந்த துன்பத்தை வெல்வதற்கு அதைப்போல் சிறந்த வழி இல்லை’ என்று விளக்குவர். "இன்னாமை இன்பம்’ (குறன் 630) என்ற குறளில் இன்