பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்க்கு அறிவுரை 贾罗露 என்காவில் இன்கவி யான் ஒரு வர்க்கும் கொடுக்கிலேன் தென்னா தெனா என்று வண்டுமுரல் திருவேங்க டத்து என்ஆனை என்.அப்பன் எம்பெரு மானுள னாகவே (1) இதமுரைக்க இழிந்த ஆழ்வார் அவர்கட்கு ருசி பிறக்கைக் காகத் தம்முடைய மதத்தை முந்துற முன்னம் அருளிச் செய் கின்றார். அடுத்த அடிகளில் அவர்கள் செய்யவேண்டியதை அருளிச் செய்யாமல் தம்முடைய நிலைமையைப் பேசுவது அவர்கள் சிறுவர்களோ என்ற அச்சத்தினால் போலும். வழிதவறிப் போகின்றவர்கள் சரியான வழியே போவான் ஒருவனைக் கண்டால் தாமும் அங்ங்ணமே போக வேண்டு மென்று ஆசைப்படுவார்களல்லவா? அதற்காகத்தான் தம். நிலையை எடுத்துக்காட்டுகின்றார் என்று கொள்ளலாம். ‘எம்பெருமான் ஒருவனையே துதிக்கப் பிறந்த நான் வேறொருவரையும் துதிக்கமாட்டேன்' என்று சொல்ல வேண்டியவர் யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் என்று சொல்லுவதில் ஒரு கருத்துச் சிறப்புண்டு. எம்பெருமானைத் துதியாமல் இருந்தாலும் இருக்கலாம், பிறரைத் துதிக்கலா காது என்பதுவே அது. திருவேங்கட முடையானே என் பாசுரத்திற்குப் பொருளாகக் கூடியவன்' என்கின்றார் பின்னடிகளால். இவ்விடத்தில், "மறந்தும் புறந்தொழா மாந்தர்’ -நான். திருவந். 68 "தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இமைப்aொழுதும் எண்ணோமே". பெரி. திரு. 2:6:2