பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

巫愛む வாய்மொழியும் வாசகமுரு விழிப்புடன்தான் பேசுகின்றார். இப்படிச் சொன்னால் புலவர்களும் வெறுப்பை அடைவார்கள்: செல்வர்கட்கும் விரோதமாக இருக்குமே என்று கருதுகின்றார். இப்படிச் சொன்னால் தனக்கும் சொரூப விரோதமாக இருக்குமே என்றுகூட நினைப்பதாகக் கொள்ளலாம். நரர் புகழைப் பாடுவது பற்றி நெஞ்சினால் நினைப்பதும், வாயினால் சொல்லுவதும் கூட தமக்குச் சொரூப விரோதம் ஏற்படும் என்பது இவர்தம் திருவுள்ளம் கருதுவதாகவும் கொள்ள லாம், சொன்னால் விரோதம் ஏற்படும் என்று இவர்தம் திருவுள்ளம் கருதுவதாகவும் கொள்ளலாம். சொன்னால் விரோதமேயாகிலும் நீங்கள் படும் தொல்லைகளைப் பொறுத்திருக்க மாட்டாமையால் சொல்லாதிருக்க முடிய வில்லை’ என்கின்றார் என்பது ஆகிலும் சொல்லுவன் என்பதால் பெறப்படுகின்றது. தன் பக்கலில் தவறாக தடந்து கொள்ள முயலும் இராவணனைக் குறித்து சீதாப் பிராட்டி அறிவுரை கூறினது போலவும், பிரகலாதாழ வாரன் இரணியனைக் குறித்தும் அசுரக்குடி மக்களைக் குறித்தும் அறிவுரை பகன்றது போலவும், தன்னை முற்றிலும் வெறுத்த இராவணனைக் குறித்து விபீஷணாழ் ன்ை அறிவுரை சொன்னது போலவும், விமுகரானாரையும் குறித்து, அவர்களையும் விடமாட்டாத நசையாவே, ஆழ்வார் அவர்கட்கு இதோபதேசம் பண்ணுகின்றார் என்பதை ஈண்டு நாம் அறிதல் வேண்டும். . 'பால்குடிக்கக் கால் பிடிப்பாரைப்போலே பகவத் விஷயத்தைக் கேட்பதற்குக் கால்பிடிக்கின்றார்" என்பது நம்பிள்ளை ஈடு. *நான்சொல்வதைக் கேட்டபின் அப்படியே அதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதுதல் வேண்டா கடைப்பிடிக்கலாம், அல்லது கடைப்பிடியா தொழியலாம். என் சொற்களுக்குக் காது கொடுத்தால் போதும் கடலோசைக்குக் காது கொடுக்கின்ற நீங்கள் அப்படியே என் சொற்களுக்கும் காதுகொடுக்கலாகாதோ?’’ ರ್ಸ್ತ கருத்துகள் கேண்மினோ' என்பதால் புெறப்படு கின்றது என்பதை நாம் நுணுகி அறிதல் வேண்டும். அடுத்து ஆழ்வார் பேசுவது !