பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. புலவர்க்கு அறிவுரை திமிழ் இலக்கியத்தில் சங்க காலத்தையும் நீதி நூல் காலத்தையும் அடுத்துத் தெளிவாகக் காணப்படுவது பக்தி இலக்கியக் காலம் ஆகும். கி. பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் சைவ சமயப் பெரியவர்களான நாயன் மார்களும் வைணவ சமயப் பெரியவர்களான ஆழ்வார் களும் தோன்றிப் பக்திப் பாடல்களைப் பாடிப் பக்தி இலக்கியக் கருவூலத்தை நிரப்பியவர்கள். இறைவனைப் வற்றிய பாடல்கள் பெருகி வரும் காலத்தில் கல்வி நிரம்பிய புலவர்கள் பலர் வறுமையால் வாடிச் செல்வர்களை நாடிச் சேன்றனர். அவர்களின் புகழைப்பாடி, அவர்கள் நல்கின சிறு பொருளைப் பெற்று மகிழ்ந்தனர். தங்கள் அருமை யான கவிதை பாடும் திறமையை இப்படிச் செல்வரின் பொருளுக்காக விற்று வந்தது நம்மாழ்வார் என்று வுகழோங்கி நின்ற சடகோபரின் உள்ளத்திற்கு லெறுப்பைத் தந்தது. இங்ங்னமே, சைவப் பெரியாராகிய தம்பிரான் தோழர் என்று புகழோங்கி நின்ற சுந்தரமூர்த்தி சுவாமி கட்கும் வெறுப்பு ஏற்பட்டது. இருவருமே இத்தகைய அலவர்கட்குத் தத்தம் பதிகங்களில் அறிவுரை கூறு இன்றனர்." سی புலவர்களின் இந்த இழி நிலைமையை நினைத்து அவர் களைத் திருத்திப் பணிகொள்ள நினைக்கின்றார் ஆழ்வார். சொன்னால் விரோதமிது ஆகிலும் . சொல்லுவன் கேண்மினோ (1) என்று தன் இதோபதேசத்தைத் தொடங்குகின்றார்.

  • தமிழ்க் கா. a' நூற்றாண்டு விழா நினைவு மலரில் கிவளிவந்தது. (நவம்பர் 5, 1987).

1. திருவாய். 3.9; தேவாரம் 7.34.