பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認憲& வாய்மொழியும் வாசகமும், கவனிக்கிறார். வாழையடி வாழையாகத் தமிழையும் இசையையும் வளர்த்து வரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வேளாண்மை, பொது மருத்துவம், பல்மருத்துவம் இவற்றையும் சேர்த்துக் கொண்டு வளர்த்து வருகின்றது. இவை தவிர, பல்வேறு கல்வி நிறுவனங்களையும் கண் காணித்துவரும் பொறுப்பும் சேர்ந்து கல்விசாம்பிராஜ்யத் தைக் கல்வி இராமராஜ்யமாக்கிப் புரந்து வருவதை இந்தியத் துணைக்கண்டம் குறிப்பாகத் தமிழகம் நன்கு அறியும். பிறநாடுகளிலிருந்து மாணாக்கர் இங்குப் பயின்று வருவதால் உலகம் தழுவிய பெரும் புகழ் பெறுகின்றது. இதனை இன்று கல்வி இராம ராஜ்யமாகப் புரந்துவரும் மணிவிழாக்காணும் வள்ளல் டாக்டர் எம். ஏ. எம். இராமசாமி தாம் விரும்பும் நாளெல்லாம் உடல் நலத்துடனும் மனவளத்துடனும் வாழ்ந்து இந்த சாம்ராஜ்யத்தைச் சீரியமுறையில் புரக எல்லாம்வல்ல வேங்கடம் மேவிய விளக்கு ஒளிகாட்டி, வழியும் காட்டியருளவேண்டும் என அவன் திருவடிகளை நினைதது வாழ்த்துகின்றேன்.