பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மாழ்வாரின் இறையதுபவம் II 7 உச்சியைமோந்து உகந்து அணைத்தாற்போலே ஆயிற்றுக இவருடைய விடாய் கெடும்படி கவந்தது. Χ 3 X X இத்தகைய ஞானச் செல்வ்ர் எம்பெருமானின் பலவெற்றிச் செயல்களை அநுபவித்த பிறகு (திருவாய்.7.4) அவனது அவதார குணங்களை அநுபவிக்கத் திருவுளங் கொண்டு முதன் முதலாக, கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ ? (7.5:1) என்று இராமபிரானின் விலட்சணமான திருக்குனத்தில் ஈடுபடுகின்றார். திருவயோத்தியில் உண்டான எல்லாப் பொருள்களையும் காரணம் ஒன்றும் இல்லாமலே, நல்ல தன்மையுடையனவாகச் செய்தார். இராமன் என்பது அழகைக் குறிக்கும் சொல்; பிரான்-என்பது அறிவுள்ள சேதநர்களைத் தன்மீதுபற்றுள்ளவர்களாகவும் ஆனந்தப் படுபவர்களாகவும் செய்தல்: இப்பெருமான் அயோத்தியில் வாழ்ந்த அனைத்துயிர்கட்கும் வைகுந்தப் பதவியையும் தந்தருளினார். - இத்தகைய சக்கரவர்த்தித்திருமகனின் திருப்பெயரைத் தாங்கியவர் மணி விழா நாயகர் டாக்டர் எம். ஏ. எம். இராமசாமி. குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்ற பொய்யாமொழிக்கிணங்க தம் பாட்டனாரால் நிறுவப் பெற்றுத் தம் தந்தையாரால்-நன்கு புரக்கப் பட்டு வந்த சாம்ராஜ்யத்தைப் புரக்கும் பொறுப்பை ஏற்றார். தம் முன்னோர் கண்ட கல்வி சா ம் ராஜ் ய த் ைத மேலும் பன்முக வளர்ச்சியடையச் செய்து வருகின்றார் அ ண் ண | ம ைல ப் பல்கலைக்கழக இணைவேந்தர் இராமசாமி. மருத்துவக் கல்லூரி தோற்றுவிக்கும் தம் தந்தையாரின் அருங்கனவை நனவாக்கின. பெருமகனார். இதன் வளர்ச்சியைத் தாயினும் சாலப்பரிந்து நோக்கிக்