பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X #6 வாய்மொழியும் வாசகமும் எல்லாவற்றாலும் நிறைந்த எம்பெருமான் வந்து கலந் தருளினான்; ஆழ்வார் அது கண்டு என்னுடைய அபரிமிதமான விடாய் எல்லாம் தீர வந்து கலந்தாய்; என்னுடைய மனோரதமும் ஒருவாறு ஒருவிதமாக நிறை வேறப் பெற்றது" என்று பேரின்பம் பொலிய விண்ணப்பம் செய்கின்றார். ஆழ்வார் தம்முடைய அபினிவேசம் (அதிக ஆசை) பெரியவற்றிலும் பெரிது என்கைக்காக மூன்றடிகளில் தத்துவத் திரயத்தினுடைய (திரயம் - மூன்று) பெருமையை அருளிச்செய்கின்றார். அசித்து (அசேதநம்) என்ற தத்து வத்தின் பெருமையைச் சொல்லுகின்றது முதலடி, சித்து (சேதநம்) என்ற தத்துவத்தினுடைய பெருமையைச் சொல்லுகின்றது இரண்டாம் அடி, ஈசுவரன் என்ற தத்து வத்தின் பெருமையைச் சொல்லுகின்றது மூன்றாம் அடி. இப்படி மூன்று தத்துவங்கள் ஒன்றுக்கொன்று பெரிதாகச் சொல் விக் கொண்டு போந்து இவற்றிற் காட்டிலும் பெரியது தம்முடைய அவா என்று ஈற்றடியில் அருளிச் செய்து அது அறச் சூழ்ந்தாயே" என்று தலைக்கட்டுகின்றார். இங்கு என் அவா அற" என்பதற்கு என்னுடைய அவா சிறிதென்னும்படி’ என்று பொருள் கொள்ளுவது சிறக்கும். இதுவரையில் ஆழ்வார் தம்முடைய அவாவே பெரிது என்றிருந்தார். இப்போது தம்மை அநுபவிக்கப் பதறி வந்த எம்பெருமானுடைய அவாவின் மிகுதியைப் பார்த்த வாறே மேல் "மூன்று தத்துவங்களையும் விளாக்குலை கொண்டு அவை குளமாம்படிப் பெரிதான என்னுடைய காதலை அதனிலும் பெரிய உன் காதலைக் காட்டி வந்து கலந்தாயே! என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படிப் பண்ணிற்றே" என்கின்றார். 'பரமபததசதனை மடியிலே வைத்துக் கொண்டு மகிழ்ச்சியுற்றவராய்த் தழுவினார்” என்கின்றபடியே, பெருமாள் (இராமபிரான்) காட்டில் நின்று மீண்டு எழுந்தருளி பரதாழ்வானை மடியிலேவைத்து