பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மாழ்வாரின் இறைவதுபவம் 盔觅慕 என்கின்றாள். அஃதாவது, ஆழ்வாரின் காதல் அசேதந: தத்துவத்தையே விழுங்கிவிட்டது. அடுத்து, அஃது அசித்து தத்துவத்தைவிடப் பெரியதும், அடுத்த தத்துவமும் ஆகிய சேதததத்துவத்தையும் விஞ்சும்படி வளர்கின்றது. இந்தப். பெரிய காதலின் பெருக்கை சீவான்மா தாங்கிக்கொள்ள மு. டி யா த ப டி மிகச் சிறிதாக உள்ளது. ஆவியின் பரம் அல்ல வேட்கை’ (16.3:2}-அணு அளவினதான உயிர்ப் பொருளின் அளவன்று காதல். என்தன் அளவன்றால் யானுடை அன்பு' (இரண். திருவந் - 100) என்று பூதத்தாழ்வார் கூறுவது போல, உயிரின் அளவன்று காதல் என்றாயிற்று. - ஆழ்வாரின் காதல் எம்பெருமானின் காதலில் மூழ்குதல்: இங்ங்ணம் கங்குகரையின்றி வளர்ந்த காதல் எம்பெருமா னுடைய மிகப் பெரிய காதலில் மூழ்கிவிட்டதை அருளிச் செய்கின்றார் ஆழ்வார். - சூழ்ந்து அகன்று ஆழ்ந்துஉயர்ந்த முடிவில் பெரும்பா ழேயோ ! சூழ்ந்து அத னில்பெரிய பரகன் மலர்ச்சோ தீயோ ! சூழ்ந்து அத னில்பெரிய சுடர் ஞான இன்பம் மேயோ! சூழ்ந்துஅத னில்பெரிய என் அவா அறச்சூழ்ந் தாயே (10.10:10) இது மூன்று தத்துவங்களையும் விளாக்குலை கொண்டிருக் கும் தம் அவாவானது சிறிதாம்படி, அதாவது தம்முடைய காதல் குளத்தின் அளவு என்னும்படி, கடல்போன்ற காதலோடே எம் பெருமான் வந்து கலந்தான் என்பதைத் தெரிவிக்கின்றது. - பெரிய பிராட்டியார் ஆணையிட்டுத் தடுத்துப் பெரிய ஆர்த்தியோட் கூப்பிட்டு இவர் வேண்டிக் கொண்டபடியே