பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼翼要 வாய்மொழியும் வாசகமும் காலம் பெற என்னை காட்டுமின்கள் காதல் கடலின் மிகப்பெரிதால் நீலமுகில் வண்ணத்து எம்பெருமான் கிற்கும்முன் ைேவந்தென் கைக் - கும்எய்தான் (7.3:6) (காலம் பெற - சீக்கிரமாக; தலைவி தென்திருப்பேரையில் சென்றுசேரத் துணிதலைக் கூறுவது. எனக்கோ அபிநிவேசம் (அதிகஆசை) மீதுசர்ந்து நிற்கின்றது; எனக்கு இங்கு தரிப்பு அரிது; வீணாக எதனை யும் சொல்லிப் போது போக்காமல் இப்போதே என்னைத் தென்திருப்பேரையில் கொண்டுசென்று மகரநெடுங்காத னைக் காட்டிச் சமாதானப்படுத்துங்கள்” என்கின்றாள். குேடிக்குப் பரிகாரம் அன்றாகிலும் எனக்கு இஃதல்லது இல்லை" என்பது நம்பிள்ளை ஈடு. இதற்குக் காரணம்: :காதல் கடல் மிகப் பெரிதால்”. இதற்கு முன்னர் "காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி (5.3:4) என்று தன் காதலைக் கடலோடொத்ததாகச் சொன்னாள்; இங்கு அது கடலினிலும் விஞ்சியதாகச் சொல்லுகின்றாள். நீலமுகில் வண்ணன் அவள் முன்னே வந்து நிற்க, காதல் வளர்வதற்கு வழி ஏற்படுகின்றதேயன்றி அதனை அளவு படுத்தவழி இல்லை. உருவெளிப்பாட்டில் தோன்றியவனா தலால் அவன் அவள் கைக்கு எட்டும் நிலையில் இல்லை. மேலும் வளர்தல் : கடலளவுக்கும் மேலே வளர்ந்த ஆழ்வாரின் காதல் அதற்கு மேலும் வளர்ந்து பெருகு, கின்றது. மண்திணி ஞால மும் ஏழ் கடலும் ள்ேவி சும்பும் கழியப் பெரிதால் (7.3:8) என்கின்றாள். ஆழ்வார் நாயகி. அணுக்கள் செறிந்திருக் கின்ற இந்த உலகத்தையும் இதனைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களையும் இவற்றையெல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கின்ற ஆகாயத்தையும்விடப் பெரிதாகும்”