பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மாழ்வாரின் இறையநுபவம் 1 +3 (கன்வை - பழிமொழி, நீர்ப்படுத்து - நீரைப் பாய்ச்சி; ஈரநெல் - ஆசையாகிய நெல்: செய் - வயல்) - இது பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதலை நுவல்வது. ஊர்மக்கள் சொல்லும் பழிமொழியையே இட்டான் எம்பெருமான். ஊரார் பழிசொல்லுவதைக் கொண்டே இவள் பகவான் மீது கொண்ட காதலை அன்னை அறிந்து இத வசனங்கள் சொல்ல ஆரம்பித்தாள்; இந்த வசனம் தண்ணீர் பாய்ச்சின படியாயிற்று. எருவானது ஒரு காலை அடியில் இட்டு விடுவது; நீர் மாறாமல் பாய்ச்சப்படுவது; இதனல் ஊரார் ஒருகால்பழி சொல்ல, அன்னை உடனிருந்து பொடித்து கொண்டே இருக்க, காதல் பயிர் செழித்து வளர்வதாயிற்று. சரநெல்-அன்பாகியநெல். இது காதலுக்கு உருவகம். இதனை விளைவித்தவன் எம்பெருமான். எங்கு? ஆழ்வார் நெஞ்சமாகிய வயலில். முளைத்த’ என்பதை முளைப் பித்த என்பதாகக் கொள்ள வேண்டும், பெருஞ்செய்யுள்: என்று பெருமையிட்டுச் சிறப்பித்தற்கு நம்பிள்ளை அருளிச் செய்தது-சிச்லேஷ விச்ல்ேஷங்களாலே (கலவி பிரிவு களாலே) புடைபடுத்தி நித்தியவிபூதியோபாதி பரப்புடைய தாம்படி பெருக்கினானாயிற்று” என்பதாக. அதாவது கடலளவு பெரிதாக வளர்வதாயிற்று. ஆக, பொய்ந் நின்ற ஞாலம் (திருவிருத், 1.) தொடங்கி மயர்வற மதிநலம் அருளிச் செய்து இவ்வளவும் வர விளைவித்துக் கொண்டே காரியம் இதுவாயிற்று. காதலைக் கடலளவு பெருக்கினா யிற்று. காதல் கடலையும் விஞ்சுதல் : ஆழ்வார் நாயகியின் காதல் காடலையும் விஞ்சி நிற்கின்றது. எம்பேருமான் உருவெளிப்பாட்டில் காணப்பெறுகின்றான். அவனிடம் செல்ல வேண்டும் என்று துடிக்கின்றாள் பராங்குச நாயகி. வா. வா.-8