பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழியும் வாசகமும் I 芝 £ பிறப்பினை நல்கும் ஆசாரியனும் (5) ; என்னை அடி மைப்படுத்திக் கொண்டு என் கண்களுக்கு உன் திருமேனி யின் ஒளியைக் காட்டியருள்க (13) ; எம்பெருமான் காரணமற்ற கருணையினால் என் பாவங்களைக் தொலைக் கத் தொடங்கினபோது அடியேனும் அடியேனுடைய நெஞ்சும் அச் செயலுக்கு உட்பட்டிருந்தோம் 1201 ; பாலாழி நீ கிடக்கும் பண்பேயாம் கேட்டேயும் காலா ழும்; நெஞ்சு அழியும்; கண் சுழலும் (241 மேகங்கள், பெரிய மலைகள், கருங்கடல், செறிந்த இருள், பூவைப் பூ மற்றுமுள்ள கார் உருவங்களைப் பார்க்கும் போதெல் லாம் இவை கண்ணனின் அழகிய திருமேனி என்றெண்ணி என் மனம் என்னை விட்டு அங்கே ஒடும். 1491, பூவைப் பூ, காயாம் பூ, செங்கழுநீர்ப் பூ, கருநெய்தல் பூ ஆகியவற்றைப் பார்க்கும்போதெல்லாம் அவை எம்பெரு மானுடைய திருவுருவமே என்று கருதி என் உடலும் உயிரும் பூரிக்கின்றன (73) நின் அன்றி மற்றிலேன் கண்டாய்-எனதுயிருக்கு ஒர் சொல் நன்றி ஆகும் துணை (77) என்ற பாசுரங்களில் ஆழ்வாரது அன்பு ஆராய்ப் பெறுகியோடுவதைக் காணலாம், காதல் கடலாய்ப் பெறுகுதல் : பெரியதிருவந்தாதியில் ஆறாய்ப் பெருகியோடிய காதல் திருவாய்மொழியில் கடலாய் விரிந்து பெருகுகின்றது. இதனை ஆழ்வார் நாயகி நிலையிலிருந்து பேசுகின்றார். ஊரவர் கவ்வை ளருவிட்டு அன்னைசொல் நீர்ப்படுத்து ஈரகெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனிகங் கண்ணன் தோழி! கடியனே (9.3:4)