பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மாழ்வாரின் இறையநுபவம் II என்ற பாசுரக்தால் அறியலாம். இந்த அவா பெருகி வளர்வதை இவர்தம் பாசுரங்களால் அறியலாம்: ஆழ்வாரின் அவா முழுவதும் ஆரா அமுதமாகிய ஆண்டவன்பாலே செல்லுவதாயிற்று. இதனை அவரே ஆராக்காதல் குருகூர்ச் சடகோபன் (2.1:11) என்று குறிப்பிடுவர். இவர்தம் இந்த இயல்பினை இவர்தம் பிற பாசுரங்களாலும் ஒருவாறு அறியலாம். ஞானக் கண்ணால் சுண்ட இறைவனை ஊனக் கண்ணாலும் காண விழைந்து கண்ணிர் பெருக நெஞ்சம் நெக்குருகிப் பன்முறை கூவிக் கூவி அழைக்கின்றார் ஆழ்வார். கூவிக் கூவி கெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றல் பாவிநீ என்றொன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே (4.7:3) என்ற பாசுரத்தில் இதனைக் காணலாம். காட்சி எய்த வில்லை. நான் இந்த ஊனக் கண்ணால் காணும்படி நீ அன்போடு காட்சியளிக்க விரும்பவில்லையாயினும் அவ்விருப்பமின்மையை என் கண் எதிரே தோன்றிக் கூறுக. நீ பாவி; அதனால் உனக்குக் காட்சி தருதல் இய லாது என்றாவது என் கண்முன் தோன்றிக் கூறுக. அது வும் எமக்கு அமையும். நீ வெறுப்போடு கூறியதாயினும் அவ்வேறுபாட்டை நான் கருதவில்லை. உன்னைக் காணல், உன் சொற்களைக் கேட்டல் அவ்வளவே என் ஆசை : என்கின்றார். அவா ஆறாகப் பெருகுதல் : திருவிருத்தத்தில் முளை விட்ட ஆழ்வாரது இந்த அன்பு பெரிய திருவந்தாதியில் ஆறாகப் பெருகியோடத் தொடங்குகின்றது. இதனைப் பாசுரங்கள் பல காட்டும். நீ பேசின உபகாரத்தை வாய் விட்டுப் பேசினால் நீயே பெற்ற தாய்; பிறப்பித்த தந்தை; ஆன்மாவுக்கு உற்ற நன்மைகளைச் செய்து புதிய