பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்க்கு அறிவுரை 軍23 பொருளுக்குச் சமமானவன் என்பதைக் குறிப்பிடுவதற் காகவே இவ்வாறு கூறினார். இக் கருத்தை ஒரளவு ஒட்டித் தம்பிாரன் தோழரும். தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்மை யாளரைப் பாடாதே எங்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் (1) என்று பேசுவார். தம்மையே புகழ்ந்து இச்சையான முறையில் பேசினாலும் சார்ந்து நின்றாலும் பொருள்தர மனம் வராத செல்வரைப் பாடாமல் சிவனுடைய ஊரைப் பாடுங்கள் (புகலூர்) ; கோயிலைப் பாடுங்கள்’ என்கின்றார். - ஆழ்வார் தம் கவிதையில் திருக்குறுங்குடி எம்பெரு மானைக் குறித்துக் கவிபாட வேண்டும் என்கின்றார் பின்னடிகளில். திருக்குறுங்குடி என்றது எல்லா திவ்விய தேசங்களுக்கும் உபலட்சணம், பர வாசுதேவனாயும் 3. திருப்புகலூர் : நன்னிலம் இருப்பூர்தி நிலையத்தி விருந்து கீழ்த்திசையில் 4 கல் தொலைவிலுள்ளது. முருக நாயனார் நாடோறும் பூத்தொடுத்து வழிபட்டதலம். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரின் பாடல் பெற்ற தலம். அப்பரடிகள் முத்தி பெற்றதலம். சுந்தரர் செங் கல்லைத் தலையணையாக வைத்து உறங்கும்போது இறைவன் அதைப் பொன்னாக்கி அவருக்கு அளித்த அற்புதத்திருத்தலம். _4. தி ரு க்கு று ங் கு டி : இது பாண்டி நாட்டுப் பதினெட்டுத் திருத்தலங்களுள் ஒன்று. குறுகியவனான வாமனனது கோயிலாதலால் இத்திருத்தலத்திற்குக் குறுங் குடி என்று திருநாமம் ஏற்பட்டது. சேரன்மாதேவி இருப்பூர்தி நிலையத்திலிருந்து 16 கல் தொலைவிலுள்ளது. வானமாமலை (சிரீவரமங்கை) என்ற திருத்தலத்திற்கு மேற்கே பேருந்து வழியில் 8 கல் தொலைவிலுள்ளது. நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் பெரியாழ்வார், திருமங்கையாவார் ஆகிய நால்வரும் மங்களாசாசனம் செய்த திருத்தலம்.