பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏&全 வாய்மொழியும் வாசகமும் திருப்பாற்கடல் நாதனாயும் (வியூகம்), இராமகிருஷ்ணன் முதலிய அவதாரங்கள் செய்தவனாயும் (விபவம்), சர்வ அந்தர்யாமியாயும் கோயில், திருமலை, பெருமாள் கோயில் (திருவரங்கம் திருவேங்கடம், காஞ்சி அத்திகிரி) முதலிய திவ்விய தேசங்களில் ாோயில் கொண்டு எழுந்தருளியிருப்ப வனாயும் உள்ள சர்வேசுவரன் ஒருவனையே கவி பாட வேண்டும் என்பது ஆழ்வாரின் குறிப்பு , இங்கணமே, தம்பிரான் தோழரும், இந்தப் பிறப்புக்கு உரிய உணவும் உடையும் பெறலாம், இடர்நீங்கி வாழலாம்; மறுமையில் சிவகதியும் கிடைக்கும். ஐயமே இல்லை என்கின்றார். பின்னடிகளில், - - ஆழ்வார் கூறுவது : காலம் என்னும் ஒரு பொருள் உள்ளவரையும் நிலை நின்று அநுபவிக்கும்படி கைங்கரி வத்தைத் தந்தருளி நம்மை ஆட்கொள்பவன் எம்பெருமான்: இவன் கைங்கரியம் செய்கின்ற நித்தியகுரிகளை ஒரு நாடாக உடையவன்; இப்படிப்பட்ட எம்பெருமானை எத்தனை யூழிகாலம் கவி பாடினாலும் ஏற்றிருக்கும்; பாடு வதற்கு மெய்யான திருக்குணங்கள் எல்லை கடந்தவை உண்டு. பாடுபவர்கட்கும் அடையத் தக்கவையெல்லாம். அடையும் சித்தி உண்டு. பாட்டுக்கும் மிக்க சிறப்புண்டு இப்படியிருக்கக் கீழான பொருள்களைத் தேடித் திரிந்து 5. எம்பெருமானுடைய திருமேனி பரம், வியூகம், விடவம், அந்தர்யாமி, அர்ச்சை என ஐந்து நிலையின் இருக்கும்.பரம் என்பது வைகுந்தத்தில் எழுந்தருளியிருக்கும் பரவாசுதேவனின் இருப்பு: வியூகம் என்பது திருப்பாற் கடலில் வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்தியும்னன் அநிருத்தன என்ற நால்வரின் இருப்பு: விபவம் என்பது: அவதார மூர்த்திகளின் இருப்பு: அந்தர்யாமி என்பது எல்லோருடைய இதயகமலத்தில் எழுந்தருளியிருக்கும்நில்ை: அர்ச்சை என்பது, திவ்விய தேசங்களில் எழுந்தருளியுன்ள நிலையும், மற்றும் அடியார்களின் வேண்டு"ாளின்படி அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு திருமேனி கொண்டு. இருக்கும் நிலையும். -