பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலவர்க்கு அறிவுரை 夏多姆 எள்வி ழுந்திடம் பார்க்கு மாகிலும் ஈக்கும் ஈகில னாகிலும் வள்ள லேளங்கள் மைந்தனே என்று வாழ்த்தி னுங்கொடுப் பாரிலை (8) என்ற பாடல்களில் காட்டுவர். இவர்களைப் பாடுவதைத் தவிர்த்துப் பூம்புகலூரைப் பாடுமாறு ஆற்றுப்படுத்துவர்.

  • நான் பிறரைக் கவி பாடுவேன் என்றாலும், என்வாய் அவனைத் (எம்பெருமானைத்) தவிரப் பாடாது" என் கின்றார் குருகூர்ச் சடகோபர்.

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க் காயங் கழித்தவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன் மாய மனிசரை என்சொல வல்லேன் என் வாய்கொண்டே (8) என்பது பாசுரம். நங்பின்னைப் பிராட்டியின் விரோதி களைத் தொலைத்து அவளை அடிமை கொண்டதுபோல என் விரோதிகளையும் தொலைத்து என்னை அடிமை கொள்பவனான எம்பெருமானையொழிய வேறு நீசரைக் கவி பாட நான் நினைத்தாலும் என் வாய் அதற்குப் பாங்காகாது' என்கின்றார். எம்பெருமானை வருணிக்கப் புகுந்து நப்பின்னை கேள்வன் என்று சொல்லி அந்த நப்பின்னையைப் பல பாசுரங்களால் வருணிப்பது, அவளது தோளழகினைப் பல பாசுரங்களால் வருணிப்பது, இப்படி எத்தனை யூழிக்காலம் பாசுரம் பாட நினைத்தாலும் பொருள்கள் பரந்து பட்டிருக்க இதரப் பொருள்களைப் காட என்ன அவசியம்?' என்று காட்டுகின்றார். 9 سسسسfr فيه مfr فيه