பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

赛盏翻 வாய்மொழியும் வாசகமும் இப்பாசுரத்தில் ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப் போய்க் காலம் கழித்து’ என்ற தொடர் மிக இனிமையானது. எல்லை இல்லாத பகவத் குணங்களையே. இடைவிடாது பாடிக்கொண்டிருந்து அதுவே யாத்திரை யாப் உடலை விடவேண்டுமென்கின்ற பாரிப்பை ஆழ்வார். தெரிவிக்கின்றனர். இந்த முறையில் சரீரம் கழிந்தால் சுவர்க்கமோ நரகமோ செல்லப் பிராப்தியில்லையே; அவனது திருவடி நிழலில்தானே ஒதுங்கும் பேறு கிட்டும்; இக்கருத்தை மூன்றாம் அடியில் பேசினர். இங்கு, :இச்சரீரத்தைக் கழித்த பின்னர், ஸ்வாதுபவம் பண்ணி யிருத்தல், வேறு பயன்களைக் கொள்ளுதல் செய்ய இராமல், அடிமைக்குப் பாங்கான சரீரத்தைப் பெற்று, தாய்முலைக்கீழே போய் ஒதுங்குக் இளங்குழவியைப் போன்று திருவடியின்கீழே ஒதுங்குவேன் என்னும் ஆசை புடையவன் நான்” என்பது நம்பிள்ளை ஈடு. "மாய மனிசரை" என்பது, பிறப்போடே முடிகின்ற அழிவினையுடையவர்களை அதாவது-வாடத்தொடங்கின கவி முடிவதற்கு முன்னே முடியும் மனிதரை" என்பது (இஃது ஈடுர், கழுத்துக்கு மேலே சொல்ல என்னிலும் இசைகிறது இல்லை என்பார், வாய் கொண்டு சொல்ல வல்லேன்' என்கின்றார். வேறே சிலர் வாக்காலே பாடினா லும் பாடலாம் என்பார் என்வாய் கொண்டு என்கின்றார், "மனம் முன்னே வாக்கு பின்னே என்னக் கடவதன்றோ? எம்பெருமான் விஷயத்தில் காதலைப் :ண்ணிப் புறம்பே சிலரைக் கலி பாடலொண்ணுமோ? ஆசைப்படுவது ஒன்றாய், பேசுவது வேறொன்றாய் இருக்குமோ? எல்லா இந்திரியங்கட்கும் அடி, மனம் அன்றோ? அதனைத் தொடர்ந்து செல்வன அன்றோ அல்லாத காரணங்கள்? இப்போது இப்படிச் சொல்வதற்குக் காரணம் என்? என்னில்: சம்பந்தம் ஒத்திருக்கப் புறம்பே சிலர் சிலரைக் கவி பாடக் காண்கையாலே நான் முந்துற முன்னம் இதில் நின்றும் தப்பப் பெற்றேன்” என்கின்றார்.