பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. திருக்குறள்-சமயவியல் சிந்தனைகள்" சமயமே-மெய்ப்பொருளியலே-மானிட வாழ்க்கையின் சிறந்த நிலை என்று கருதுவர் சான்றோர். திருக்குறள் ஒரு நாத்திக நூல் என்று இதுகாறும் எவராலும் நிறுவப்பெறி. வில்லை. ஏன்? தந்தை பெரியார் கூட திருக்குறளை ஒரு பகுத்தறிவு நூலாகவோ ஒருநாத்திக நூலாகவோ ஏற்க வில்லை. கடவுள் வாழ்த்து' அடங்கிய பாயிரம் வள்ளுவர் பாடவில்லை என்ற கருத்துகூட உண்டு. கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் கூட இக்கருத்திற்கு உடன் பாடாக இருந்தார். எனினும், பாயிரத்திற்கும் நூலுக்கும் உன்ன சொல், ெய | ரு ள், ஒருமைப்பாடுகளைக் காரணமாகக் கொண்டு நோக்கினால் பாயிரம் பாடியது அவரே எனலாம். எல்லாச் சமயத்தவர்களும் அவரைச் சிறைப்படுத்த முயன்றாலும் அவர்கட்கு அகப்படாமல் தப்பித்தே செல்கின்றார். பல்லாண்டுகளாக வைணவத்தை யும் சைவத்தையும் ஆழ்ந்து கற்பவனாதலால் நம் அருமைத் தம்பி டாக்டர் கு. மோகனராசு நான் சமயச்சிறையில் அகப் பட்டவன் என்று கருதித்தான் இந்தப் தலைப்பு தந்துள்ளார் என்று கருதுகின்றேன். ஆனால் ஒன்று சொல்வேன்; அதை வற்புறுத்தியும் சொல்வேன். நான் சமயங்களை ஆழ்ந்து பயில்பவன்; சமயச் சான்றோர்களின் சிந்தனைகளில் மிதப்பவன், "ஒன்றேகுலம்; ஒருவனே தேவன்" என் கொள் கையில் சுதந்திரமாக இருப்பவன். சாதிப் பிரிவுகளில்

  • உலகத்திருக்குறள் உயராய்வு மையம் நடத்திய நான்காவது திருக்குறள் மாநாட்டில் (17-3-92) ஆய்வரங். கத்தில் படிக்கப் பெற்றது.