பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藏密蕊 வாய்மொழியும் வாசகமும் 3. கி. சைவம் : சமயச் சார்பு திருவள்ளுவர் வினைபற்றிய கொள்கையில் நம்பிக்கையுடையவர். இந்த நம்பிக்கை சமணத்திற்கும் பெளத்தத்திற்கும் இல்லை: திருவள்ளுவர் பிறப்பு-இறப்பு வட்டங்களில் நம்பிக்கையுடையவர். கிறித்தவர்கட்கும் இஸ்லாமியர்கட்கும் இந்த நம்பிக்கை இல்லை. திருவள்ளுவர் உலகு, உயிர், அறியாமை (அவித்யை அல்லது மாயை) ஆகிங் பொருள்களின் உண்மையை (Truth) நம்புபவர். ஆனால் சங்கரரின் அத்வைதத் தின் நிலை இதற்கு மாறானது. அத்வைதி கள் ஆன்மிகப் பயிற்சி நிலையில் (சாதன நிலை) இவற்றின் உண்மைகளில் உடன் பட்டு பேறுகிலையில் (சாத்திய நிலை) உடன் படுவதில்லை. திருவள்ளுவர் இவ்விரு நிலை களிலும் உடன்படுபவர். உயிர்கள் எண்ணற்றவை என்ற கருத்தை கடவுள் வாழ்த்தில் வரும் குணமில்வே" என்ற பன்மை வழக்கு உறுதிப்படுத்தும்: இக்கருத்து சைவத்திற்கும் வைணவத் திற்கும் உடன்பாடானது. அத்வைதத்திற்கு முரண்பாடானது. . சைவத்திற்கும் வைணவத்திற்கும் சிந்தாந்த அடிப்படையில் வேறுபாடுகள் அதிகம் இல்லை. இந்த நிலையில் திருவள்ளுவரின் உள்ளார்ந்த சைவமா? வைணவமா? என்று காண்பதில் இரண்டே காரணங்களைக் கொண்டு ஒரு முடிவுக்கு