பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷溪5 வாய்மொழியும் வாசகமும் தினின்று வந்தது. ஆயினும் அஃது உபநிடதம் என்று. வழங்கப்பெறுகின்றது. காரணம், உபநிடதங்களின் சாரம் இதில் அடங்கியுள்ளது. உபநிடதங்களைப் பசு என்று வைத்துக் கொண்டால் கீதையை அது தரும் பால் என்று: பகரலாம். பசுக்களோ பன்னிறமுடையவை: பாலோ வெண்ணிறமுடையது; பசுக்களை வைத்துப் பராமரிப்பதும் அவற்றினின்று பால் கறப்பதும் சிரமம். ஆனால் பாலை அருந்துவது எல்லார்க்கும் எளிது. பாலினின்று தயிர், மோர், வெண்ணெய், நெய் முதலியவை தயாரித்துப் பயன் படுத்திக் கொள்ளலாம். அங்ங்னமே கீதையை இம்மைக்கும். மறுமைக்கும் பயன்படுமாறு செய்து கொள்ளலாம். பசுவை ஒட்டிக்கொண்டு போகமுடியுமா? ஆனால் பாலை எங்கு வேண்டுமானாலும் பாதுகாத்து எடுத்துச் சொல்லலாம். அதாவது கீதையை தன்றாக, தெளிவாக, அறிந்து கொண்ட வர்கள் உபநிடதங்களில் அடங்கியிருக்கும் கோட்பாடுகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எல்லார்க்கும் எளிதில். வினங்காத உபநிடதங்களை விளங்கும்படி செய்தவன் கண்ணன். அதுவே கண்ணன் காட்டிய வழி. இதற்குக் கருவியாக அமைந்தவன் அருச்சுனன். கன்றுக்காகப் பசு பால் சுரக்கின்றது. பின்பு அது உலகிற்கும் பயன்படு: கிறது. கீதையும் அங்ங்னமே உலகிற்குப் பயன்படுவதா யிற்று. செரிமானத்திற்கு ஏற்ற அளவு பாலைப் பருகலாம். அது நோயாளிகட்கும் உடல்நலமுள்ளவர்களுக்கும் நல்லுணவு ஆகின்றது. கீதையை அவரவர் மனநிலையின் பக்குவத்திற்கு ஏற்பப் பயன்படுத்திப் பயன் பெறலாம். கீதை-யோக சாத்திரம் : ஒவ்வொரு சாத்திரத்திலும் கொள்கை (Theory) என்றும் நடைமுறை அல்லது அதுட்டானம் (Practice) என்றும் இரண்டு பகுதிகள் உள்ளன. யுக்தியால் முடிவுகட்டுவது கொள்கையாகும்; நடைமுறையில் செய்து காட்டுவது அநுட்டானம்: பரந்தாமன் பார்த்தனுக்குப் புகட்டியது பிரம்ம ஞானம்: புதிய ஐயங்கள் பிறக்காத அளவுக்கு ஞானத்தைப் புகட்டி