பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை - மறை முடியின் சாரம் 覆叠霹 உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பகவத் கீதை ஆகிய இம்மூன்று நூல்களும் பிரஸ்தான திரயம் (திரயம்.மூன்று) என்னும் பெயர் பெறுகின்றன. முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள். இம்மூன்றனுள் கருத்து வேற்றுமை இல்லை. மெய்ப் பொருள் விளக்கம் இவற்றுள் முறையாக அமைந்துள்ளது. இவற்றுள் அடங்காத தததுவ விளக்கம் வேறு எந்த நூல் களிலும் இல்லை. ஆகவே இத்து சமயத்தின் சாத்திரத்தைப் பிரஸ்தான திரயம்' என்று இயம்புவதில் தவறில்லை. மற்ற சாத்திரங்களில் நுவலப்பெற்றுள்ள கோட்பாடுகள் பிரஸ் தான திரயத்தில் அடங்கியுள்ள கோட்பாடுகளுக்கு விளக்க மாக வந்து அமையலாம். பகவத் கீதை : மாபாரதம் என்னும் இதிகாலத்தில் அடங்கியுள்ளது பகவத் கீதை. வீடும பர்வதத்தில் 25வது இயல் தொடங்கி 42வது இயல் முடிய அமைந்திருப்பது இந்த அரிய நூல். அதாவது இந்நூல் பதினெட்டு இயல் களாக அமைந்துள்ளது. இவற்றுள் அடங்கியுள்ள சுலோகங்: களின் தொகை எழுநூறு. மாபாரதம் முதலில் இயற்றப் பெற்றது என்றும், பகவத் கீதை பின்னர் இயற்றப்பெற்று அதில் செருகப்பட்டது என்றும் ஒரு கருத்து உண்டு. ஆனால் அதற்குத் தக்க அகச்சான்று இல்லை. இலக்கிய அமைப்பு, மொழியமைப்பு, கருத்து அமைப்பு இவற்றுள் ஒற்றுமை இருப்பதால் அக்கருத்தை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மாபாரதத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் பால் என்றால், கீதையில் அடங்கியுள்ள விஷயங்கள் வெண்ணெய் என்று கூறலாம். மாபாரதம் என்னும் உடலுக்கு கீதை இதயம்போல் அமைந்துள்ளது என்று கூறுவதும் பொருந்தும். கீதை ஓர் உபநிடதம் : உபநிடதங்களில் யாவும் நான் மறைகளினின்றும் வந்தவை. அதனால்தான் அவற்றிற்கு மறைமுடி என்ற ஒரு பெயரும் வந்தது. கீதை மாபாரதத் வா. வா.-19