பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கீதை-மறைமுடியின்சாரம்" சிமயங்களுக்குச் சாத்திரங்கள் இன்றியமையாதவை. அவை மாறிப்போகாதிருப்பதற்கும் மறைந்து போகாதிருப் பதற்கும் சாத்திரங்கள் துணைபுரிகின்றன. சாத்திரங்கள் இல்லையேல் சமயங்கள் உருமாறி விடுகின்றன; பின்பு நிலையற்று அவை அழிந்தும் போகின்றன. சாத்திரங் களைப் பற்றுக்கோடாகக் கொண்டுள்ள சமயங்கள் என்றும் அசைவற்று உள்ளன. உலகில் நீடுழி நிலைத்துள்ள சமயங் கட்கெல்லாம் அதனதன் சாத்திரங்கள் உள்ளன. கிறித்தவ மதத்திற்கு சாத்திரம் விவிலியம்; இஸ்லாம் சமயத்திற்குச் சாத்திரம் குர்-ஆன்;புத்தமதத்திற்குச் சாத்திரம் தம்மபதம்: இந்து சமயத்திற்கு அப்படித் தனிப்பட்ட சாத்திரம் ஒன்றும் இல்லை. அவரவர்கட்கு விருப்பமானவற்றைச் சொல்லுவர். இந்து சமயம் : இந்து சமயத்தில் கணக்கற்ற சாத்திரங் உள்ளன. பொதுவாக அவையனைத்தும் வேதங்களை அடிப் படையாகக் கொண்டவை. வேதங்களில் பல மறைந்து போய்விட்டன. ஆனால் மறைகளினின்றும் தெள்ளி எடுத்த உபநிடதங்கள் (மறைமூடி) காப்பாற்றி வைக்கப் பெற்றுள்ளன. மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிடதங் களின் போக்கை எடுத்துக் காட்டுவது பிரம்மசூத்திரம், இதனை வேதாந்த சூத்திரம் என்றும் வழங்குவர். இது பாதராயணர் (வேதவியாசர்) என்பாரால் இயற்றப் பெற்றது. உபநிடதங்களின் கருத்துகளை எல்லாம் தெளிவு படவிளக்குவது பகவத் கீதை. இதுவும் வேத வியாசரால் இயற்றப்பட்டது. உபநிடதங்களைப் பசுக்கள் என்று கொண்டால் பகவத் கீதையைப் பால் என்று பகரலாம்.

  • திருமலை-திருப்பதிதேவஸ்தான சமய மாத இதழ். சப்தகிரி-மார்ச்சு-1992,