பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள்-சமயவியல் சிந்தனைகள் 夏竺岛 பொருள், பற்றற்றான், வகுத்தான் எனப் பிற இடங்களில் வரும் பெயர்களும் குர்-ஆன் இறைவனைப் பற்றிக் கூறும் தன்மைகளையே வெளிப்படுத்துகின்றது. இவற்றுக்குக் மேலாக வள்ளுவர் இறைவனை உருவுடையவனாகக் குறிப் பிடவிவ்லை. குர்ஆனும் இறைவனை உருவற்றவனாகவே கருதுகின்றது. மறுமை என ஒன்று உண்டென்பதும். இம் மையில் ஒருவன் செய்த வினையின் பயனை மறுமையில் துய்ப்பான் என்று குறள் கூறுவதை (121, 222, 290) இஸ்லாமும் ஏற்கின்றது. இவற்றால் வள்ளுவர் இஸ்லாம் நெறியைத் தழுவியவர்போல் காணப்பெறுகின்றார். கிறித்தவம் : கிறித்தவ சமயக் கொள்கைகளில் ஒன்றும் திகுக்குறளில் இருப்பதாக தெரியவில்லை என்கின்றனர் கிறித்தவ அறிஞர்கள் (மெய்த்திரு டாக்டர் எஸ். இதாச மாணிக்கம்). இகழ்வாரைப் பொறுத்தல்தலை (151) என்பதால் மன்னிப்பும், பெருக்கத்து வேண்டும் பணிவு” (963)என்பதால் தாழ்ச்சியும், என்பும் உரியர் பிறர்க்கு (72) என்பதால் அன்பையும் வேண்டுமானால் கூறலாம் என்றும், ஆயினும் இவை பண்பட்ட சான்றோர் பலருக்கும் உரிய பொதுப்பண்புகளே என்றும் கூறி சமயக் கொள்கைகளாகக் கூறுவதற்ரு ஒன்றுமில்லை” என்று கையை விரிக்கின்றனர். ஆனால் டாக்டர் தெய்வநாயகம் என்பார் திருவள்ளுவர் கிறித்தவரே எனக் கூறிப் பல சிறுசிறு நூல்களை வெளியிட் டுள்ளார். அவர் கிறித்தவத்திற்கு முரணாகத் தென்படும் பல குறள்கட்குப் புதிய விளக்கங்கள் கூறி அறிஞர்களின் கண்டணத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் மனோன் மணியத்தில் சீவகனும், நாராயணனும் வாதாடும்போது இறுதியில் எதற்கும் திருக்குறள் இடம் தரும், விடு, விடு” என்று சீவகன் முடிவு கட்டுவதை நினைவு கூர்ந்து இவ்வாய் வுக்கு - சிந்தனைகட்கு - முடிவு கட்டுகின்றேன். திறந்த மனத்துடன் மேற்கொள்ளும் ஆராய்ச்சி மனத்திற்குத் தரும் மகிழ்ச்சிபோல் உலகில் வேறொரு பொருள் இல்லை.