பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼茎客 வாய்மொழியும் வாசகமும் கூறுவதையும் காட்டுவர். (3) பொறிவாயில் ஐந்தவித்தான் (6) என்ற தொடர் அருகக் கடவுளராகிய இருபத்து நான்கு திர்த்தங்கரருக்கும் பொருந்தும். இந்தத் தீர்த்தங்கரர்கள் மனிதராகப் பிறந்து பொறிவாயில்கள் ஐந்தினையும் அவித்துப் பிறவி நீங்கிக் கடவுளர் நிலையை அடைந்தனர் என்பது சமண சமயக் கொள்கை. ஐம்பொறிகளும் இயற்கையாகவே இல்லாத கடவுளர்கள் ஐம்பொறிகளை இக்க வேண்டியதில்லையன்றோ? என்கின்றனர். (ச) ஆற வாழி அந்தணன்' (8) என்பதும் அருகக் கடவுளையே கட்டுகின்றது. அருகப் பெருமானும் அறவாழியை 《感每48 சக்கரத்தை) யுடையவர். அவருடைய அற தெதி அறவாழி என்று கூறப்பெறுகின்றது. சமணர்கள் தங்களுடைய திருக்கோயில்களில் தருமசக்கரத்தை வைத்து வனங்குகின்றனர். அருகர் (தீர்த்தங்கரர்) எழுந்தருளும் போது அவருக்கு முன்னால் அறவாழி செல்லுகின்றது. என்பது சமணர்களின் நம்பிக்கை. இவற்றால் திருவள்ளுவர் சமணர் என்பது பெறப்படுகின்றது. இஸ்லாம் : திருக்குறள் தோன்றிய மண் தமிழகமாயி னும் தமிழ், தமிழ்நாடு என்ற சொற்களே வரப்பெறா. முதல் குறளிலேயே உலகு என்ற சொல் அகிலத்துவ நோக்கோடு அமைக்கப் பெற்றிருப்பதாலும், எப்பாவலரும் ஏற்கும் பொது அறங்களைக் கூறுவதாலும், பொதுமறை” என்ற பாராட்டைப் பெற்றது. திரு குர்-ஆன் அறபு மொழி யில் அருளப் பெற்றதாயினும், மனிதகுல அனைத்துக்கும் நல்வழிகாட்டும் மறையாகவே அமைந்துள்ளது. இஸ்லாம். பல தெய்வ வழிபாட்டை ஒப்புககொள்ளவில்லை. வள்ளு வரும் பல தெய்வங்களைக் குறிப்பிடவில்லை. பிற தமிழ் நூலார் போலன்றிச் சமயச் சார்பற்ற குணப் பெயர் களாலேயே இறைவனைக் குறிப்பிடுகின்றார் வள்ளுவர். ஆதிபகவன், வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை. இலான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண் குணத்தான், இறைவன் என்று கடவுள் வாழ்த்தில் வரும் பெயர்களும், பொருள், செம்பொருள், மெய்ப்