பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் சமயவியல் சிந்தனைகள் 贾4夏 அடைந்த பகவான் புத்தர் தாம் கண்ட அறநெறியை உலசு மக்களுக்குப் போதித்தார். அந்தப் போதனைக்குத் “தரும சக்கரம் (அறவாழி) என்பது பெயர் என்று பெளத்த சமய நூல்கள் (எ. டு. மணிமேகலை) கூறுகின்றன. தர்மபீடிகை (தர்ம சக்கரம்) என்பது அறவாழி. புத்தருடைய போதனையை அறவாழியாக அமைத்துப் பெளத்தர்கள் வணங்கினார்கள். அறவாழி என்பது திருமால் ஏந்தியுள்ள சுதர்சனம் என்ற சக்கரப் படையைக் குறிக்காதோ என்ன், குறிக்காது. அது மறவாழி, சுடராழி, கொலை யாழி, எரியாழி என்றெல்லாம் ஆழ்வார்கள் அருளிச் செய் திருக்கின்றபடியால் என்க என்பர். தம்மபதத்தில் காணப் படுகின்ற பல கருத்துகள் திருக்குறளிலும் காணப்படுவதால், வள்ளுவர் புத்த சமயச் சார்புடையவரே என்று நிலை தாட்டுவர். சமணம் : சமணர்களும் மேற்காட்டிய குறள்களையே எடுத்துக் கொண்டு தம் வாதத்தை நிறுவுகின்றனர். {1) ஆதிபகவன் (1) என்பது சமண சமயக் கடவுளையே சுட்டுகின்றது. அருகக் கடவுளராகிய இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களில் முதல்வராகிய இரஷபதேவர் ஆதிநாதர் என்றும், ஆதிபகவர் என்றும் கூறப்படுகின்றார். ஆதலால் *ஆதிபகவன் சிறப்பாக அருகக் கடவுளையே சுட்டுகின்றது. (2) மலர்மிசை ஏகினான்: (3) என்ற தொடரும் அருகக் கடவுளை (தீர்த்தங்கரரை)ச் சுட்டுகின்றது. அருகப் பெருமான் எழுந்தருளும்போது தாமரைப் பூக்கள் தோன்றி அவருடைய திருப்பாதங்களைத் தாங்குகின்றன. என்பது சமண சமயக் கொள்கை. சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் மலர்மிசை நடந்தோன் மலரயன் அல்லது என், தலைமிசை உச்சிதான் அருளிப் பொறாது, என்று கூறுவதையும், தண்டாமரை மேல் நடந்தான் தடந்தாள் வணங்கிக், கண்டேன் கிடந்தேன் கனவின்' என்று 1. சிலப் நாடுகாண். அடி 204.5. 2. நீலகேசி-அவையடக்கம்.