பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 4t? வாய்மொழியும் வாசகமும் இச்சொல்லுக்கு இப்பொருளாதலை * எண்பதத்தால்* (548, 991) என்றவற்றின் சொற்பொருளால் அறியலாம் என்று உறுதிப்படுத்துவர். 'எளிவரும் இயல்வினன்’ (1.2:3), * யாரும் ஒர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்’ (1.3:4) என்ற திருவாய்மொழிகளை இதற்கு அரணாக அமைத்துக் கொள்வர். இறைவனின் திருக்குணங்களுள் *செளலப்பியம் (சுலபமுடைய குணம்)என்பதனை அடியார் கள் சிறப்பித்து கூறுவதும் இதனை வற்புறுத்தும் என்பர்; இன்னும் வை. மு. கோ (எண்குணத்தான்) என்பதற்கே விஷ்ணுவின் எட்டுக் குணங்களையே எடுத்துக் காட்டுவர். {8} தாமரைக் கண்ணான் (1191), அடியளந்தான் (6.10) என்ற இரண்டு பெயர்களும் திருமாலுக்கன்றி வேறு எத்தெய்வத்திற்கும் இல்லாமையை எடுத்துக்காட்டுவர். இக்கூறியவற்றால் திருவள்ளுவர் சமயம் வைணவமே என்று விதந்து கூறுவர். பெளத்தம் : (1) மலர்மிசை ஏகினான் (3) என்பதில் "மலர்" என்பது தாமரைப்பூ. பகவான் புத்தர் பிறந்த வுடன் ஏழடி நடந்தார் என்றும் ஒவ்வொரு அடியை வைக்கும் போது தாமரைப்பூ தோன்றி அவருடைய பாதங் களைத் தாங்கிக் கொண்டன என்றும் பெளத்த நூல்கள் கூறுகின்றன. ஆகவே, மலர்மிசை ஏகினான்’ என்பது புத்தரையே குறிக்கும். எவ்வாற்றானும் சைவ, வைணவ சமயக் கடவுளரைக் குறிக்கவில்லை என்பது உறுதி என்பர். ( ) ஐந்தவித்தான் என்பதும் பகவான் புத்தரையே குறிக்கும். புத்தர் பெருமான் மனிதனாகப் பிறந்து வளர்ந்து தம்முடைய பொறிவாயில்கள் அவித்துப் போதி ஞானம் பெற்றுப் புத்த பதவியை அடைந்தார். சிவபெரு மானும் திருமாலும் ஐந்தவித்தவர் அல்லர்; அவர்கள் மனிதனாகப் பிறக்காமலேயே (பொறிபுலனும் இல்லாமல்) ஆதியிலிருந்தே க டவு ன ர்க ளாக இருப்பவர்கள். (3) "அறவாழி அந்தணன் (8) என்ற சொற்றொடரும் புத்தர் பெருமானையே குறிக்கின்றது. பொறிவாயில் ஐந்தவித்துப் போதி ஞானம் பெற்றுப் புத்தர் நிலைம்ை