பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏垒8 வாய்மொழியும் வாசகமும் என்றும் மாறாதுள்ளது. ஆகவே சுருதி யாண்டும் சாசுவத மாக-கிலைபேறுடையதாக-அமைந்துள்ளது. சுமிருதி என்பது நினைவில் வைத்துக்கொண்டுள்ளது என்று பொருள் படுவதாகும். சமூக வாழ்க்கை சம்பந்த மான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் சேர்ந்த பகுதி சுகிருதி என்ற திருநாமம் பெறுகின்றது. நன்கு அமைக்கப் பெற்ற சுமிருதிகள் எப்போதும் பரதத்துவங்களை அடிப் படையாகக் கொண்டவை. பராசர சுமிருதி, மநுசுமிருதி முதலியவை புகழ் பெற்றவைகள். இவை நிலையானவை அல்ல. காலத்துக்கும் இடத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்ப மாறியமையும் தன்மையவை. இதனால்தான் சில தமிருதிகளின் அடிப்படையில் அமைந்த சில திருக்கோயிலின் வழிபாட்டு முறைகளில் காலப் போக்கில் மாற்றம் அடைந்து கொண்டே வருகின்றன. பகவத் கீதை ஏக காலத்தில் சுருதியாகவும் சுமிருதியாக வும் செயற்படுகின்றது. பரதத்துவத்தை அது நன்கு விளக்குவதால் அது சுருதியாக அமைகின்றது. பரதத்துத்வ திற்கு ஏற்ற வாழ்க்கை அமைவது சநாதன தர்மம். கீதை யினின்று சநாதன தர்மத்தை உள்ளபடி கற்றுக்கொள்ள லாம். சமுதாய அமைப்பு எத்தகையது என்பதையும், அஃது எங்கனம் நடைபெறவேண்டும் என்பதையும் கீதை நன்கு விளக்குகின்றது. சநாதனதர்மம் யுகதர்மமாக வடிவெடுக் கும் பாங்கையும் அது காட்டித் தருகின்றது. .۱ மற்ற சுமிருதிகள் காலத்திற்கேற்றவாறு மாறியமையும் எனினும் கீதையை மாற்றி அமைக்க முடியாது. கீதை சமூக நடைமுறையிலும் எக்காலத்திற்கும் பொதுவான கோட்பாடுகளைக் கொண்டிருப்பதால் இஃது எக்காலத் திற்கும் எல்லாச் சமூகங்கட்கும் பயன்படும் சுமிருதியாகும். கீதையைக் கற்போர் பாரமார்த்திகத் தத்துவங்களையும் 'உலக நடைமுறைத் தத்துவங்களையும் கற்றறிந்தவர்கள் ஆவர்.