பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை - மறைமுடியின் சாரம் 149 ஆன்ம-பரமாத்தும உறவு : உலகில் உள்ள சமயங்கள் போற்றும் உயர்ந்த நூல்கள் யாவும் பொது இயல்பு ஒன்றைக் கொண்டுள்ளன. அவை நேர்முகமாகவோ, மறை முகமாகவோ பரமான்மாவுக்கும் சீவான்மாவுக்கும் உள்ள உறவு முறையை நுவல்கின்றன. வேதங்களில் உள்ள நான்கு மகா வாக்கியங்களுள் மிக்க சிறப்புடையதாகக் கருதப் பெறுவது தத் துவம் அலி என்னும் மூன்று சொற்களைக் கொண்ட வாக்கியம் ஆகும். துவம் - நீ தத்-அதுவாக, அளி-இருக்கிறாய் என்பது பொருள். சீவான்மாவாகிய நீ பரமான்மாவாகிய அகற்கு வேறுபட்டவன் அல்லன் என்பது இதன் விளக்கம். இக்கோட்பாட்டை எல்லாச் சாத்திரங் களும் ஏதேனும் ஒரு விதத்தில் எடுத்தியம்புகின்றன. கீதை இந்த உயர்ந்த விளக்கத்தை ஒதுகின்றது. யோகம் யோகம் என்று முடியும் பதினெட்டு இயல் களைக் கொண்டது கீதை, திரிஷட்கம் (3x6 மூவாறு) என்று அப்பதினெட்டு இயல்களும் வழங்கப்பெறுகின்றன, இவற்றுள் முதல் ஆறு இயல்கள் துவம் (t) என்ற சொல்லுக்கு இலக்காக உள்ள ஆன்ம தத்துவத்தை விரிவாக விளக்குவதாக அமைந்துள்ளன. சீவனிடத்துள்ள குறை பாடு, அவன் அடைய வேண்டிய நிறைநிலை, அதற்காக அவன் மேற்கொள்ள வேண்டிய மு பற்சி ஆகியவை அனைத்தும் முதல் ஆறு இயல்புகளில் அடங்கியுள்ளன. கீதை இதனை முதல் ஷட்கம் என்று வழங்குகின்றது. இயல் ஏழு முதல் இயல் பன்னி ன்டு ஈறாக உள்ளவை தத் (அது) என்னும் சொல்லுக்கு இலக்காக அமைந்த பரதத்துவம் (அல்லது பரமான்மா) என்பதை விரிவாக விளக்குகின்றன. உலகனைத்திலும் அவர் எப்படி உள்ளார், உலகங்களில் அவர் எப்படி அந்தரானமாவாக உள்ளார். உலகங்களைக் கடந்தவராகவும் எப்படி அவர் உள்ளார் ஆகியவை யாவும் இரண்டாவது பகுதியில் வந்தமை கின்றன. இஃது இரண்டாவது ஷட்கம் என்று வழங்கப் பெறுகின்றது.