பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置莎莎 வாய்மொழியும் வாசகமும் இயல் பதிமூன்று முதல் இயல் பதினெட்டு முடியவுள்ள ஆறு இயல்களில் அலி (இருக்கிறாய்) என்னும் சொல்லுக்கு இலக்காகவுள்ள பரமான்மா - சீவான்மா இணக்கத்தை - உறவினை - இப்பகுதி தெளிவுறுத்துகின்றது. இந்த மூன்று பகுதிகட்கும் சமமான நிலையை அளித்துள்ளது கீதை. ஒவ்வொரு பகுதியையும் ஒருமைப்படுத்தித் தெளிவாகவும் முறையாகவும் விளக்கியிருப்பது போன்று உலகில் வேறுஒரு துரலைக் காண்டல் அரிது. ஆகவே மகாவாக்கியத் திற்கு முறையான விளக்கம் என்று கீதையைக் கூறலாம். முத்தி நிலைகள் : பிரஸ்தான திரயம் துவலுகின்ற கோட்பாடுகளையெல்லாம் தொகுத்து அத்தொகுப்பை ‘வேதாந்தம் என்று சொல்லுவது உண்டு. வேதத்தின் அந்தம் (முடிவு) வேதாந்தம். இம்மை, மறுமைகளைப் பற்றிப் பகர்வது வேதம். இந்திரியங்கள்மூலம் நுகரும் அகில வாழ்க்கையைப் பற்றிப் பகர்வது வேதம் என்று வேறு ஒரு முறையிலும் கூறலாம். புலன்கட்கும் மனத்திற்கும் எட்டாத பரத்தைப்பற்றிப் பேசுவது வேதாந்தம். நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் தோன்றியுள்ள எல்லாச் சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களை வேதாந்தத்தில் காணலாம். வேதாந்தத்தில் இல்லாத கோட்பாடு உலகில் எந்தச் சமயத்திலுமே இல்லை. ஆக, சமயங்கட்கெல்லாம் தாய் மதமாக இருப்பது வேதாந்தம். மெய்ப்பொருளுக்கு எந்தத் திருநாமத்தை இட்டு வழங்கினாலும் வேதாந்தம் ஒப்புக் கொள்ளும். பெயரையும் விளக்கத்தையும் முன்னிட்டுப் போரிட்டுக் கொண்டிருக்கும் சமயங்களை அடிப்படைக் கோட்பாட்டைக் காணுமாறு துரண்டுவது வேதாந்தம். தமிழர் தண்ணீர் என்பர்; இந்தி மொழியினர் பாணி என்பர்; மலையாளிகள் வெள்ளம் என்பர்; ஆங்கிலேயர்கள் வாட்டர் என்பர். இவர்கள் குறிக்ரும் பொருள் ஒன்றே. இங்ங்னம் சமயங்கள் சாற்றும் கருத்து களில் பொதுத்தன்மையை நோக்கும் பண்பு நம்மிடம் கோன்றுமானால் வேற்றுமையும் வீண்வாதமும் விதண்டா