பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைேத - மறைமுடியின் சாரம் 瑟惠意 வாதமும் ஒடுங்கும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு வளரும். மனிதன் அடையும் உயர்நிலையை ஐயம் திரிபு இன்றி விளக்குவது வேதாந்தம். மக்களிடையே வழங்கும் சிறு சிறு சமயங்களை விட்டு முக்கியமானவற்றை நோக்கினால் துவைதம், விசிட்டாத் வைதம், அத்வைதம் என்ற மூன்று முக்கிய சமயங்கள் தென் படும். இவற்றைச் சுருக்கமாக நோக்குவோம். நம் கண்ணுக்குப் புலப்படுவது இவ்வுலகம்; இதில் வாழும் உயிர் கள் சீவர்கள். உலகையும் சீவர்களையும் தாங்கி நிற்கும் பெரிய பொருள் பரம் (பிரம்மம்) என்பது. இப்பரம் பொருள் பேரறிவும் பேராற்றலும் கொண்டது. இது உலகனைத்தையும், உயிர்கள் யாவற்மையும் ஆண்டு வருகின்றது, உலகப்பிணிப்பில் அடங்கியுள்ள சீவர்கள் எண்ணிறந்த பிறவிகளை எடுக்கின்றனர். இப்பிறவிகள் மூலம் அவர்கள் மேலான நிலைக்குப் போவதும் உண்டு; கீழான நிலைக்கு இறங்குவதும் உண்டு; சீவர்கள் தாம் இயற்றும் புண்ணிய பாவங்கட்கேற்ப இந்நிலைகளை அடை கின்றனர். உலகினின்றும் விடுதலை அடைந்து பரம் அல்லது ஈசுவரனைச் சார்வது முக்தி. எல்வா உயிர்களும் முக்தி அடைய வேண்டும். இககோட்பாட்டை மூன்று சமயங் களும் ஒப்புக்கொள்கின்றன. இம்மூன்று சமயங்களிலும் தனி இயல்புகள் உண்டு. துவைத சமயம் : உலகம், சிவன், பரம் ஆகிய மூன்றும் அனாதியானவை எனச் சாற் று ம். இவற்றிற்குத் தொடக்கம், முடிவு இல்லை. பரம் பொருள் உலகையும் சிவர்களையும் ஆளுகின்றார். ஆனால் உலகமும் சீவனும் யாண்டும் பரத்திற்கும் வேறானவை. சீவன் பரத்தின் கருணையினால் உலகினின்றும் விடுதலையடைந்து அவருக்குத் தொண்டனாய் ஆட்படுவது முக்தி, முக்தியில் பரமன் வேறு, சீவன் வேறு. இரண்டும் தனித்தனியாக இருப்பவை.